
வன்னியில் இனப்படுகொலை நடந்ததும் அமரிக்கா இரட்டைக் கோபுரத் தாக்குதலில் முக்கிற்கு மேல் கோபத்தை அடக்கி வைத்திருந்து அவிழ்த்து விட்டதாலேயே என்று தமிழ் ‘அரசியல் அறிஞர்கள்’ கூறுவது வழமை. அதே வேளை அமரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல்களை அமரிக்காவே திட்டமிட்டு நடத்தியிருக்க வேண்டும் என்று பலர் ஆதாரங்களோடு தெரிவித்தனர்.
முக்கிய ஆதரங்கள் அமரிக்காவின் உள்வீட்டுச் சதியே இது எனக் கூறின.
முதலாவதாக, அமரிக்காவில் கொப்பெந்கேகன் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றும் பேராசியர் நீல்ஸ் ஹாரிட்ஸ் இனுடையது. விஞ்ஞான சான்றுகளுக்கான உலக நிபுணரான கலாநிதி ஹாரிட்ஸும் அவரது குழுவும் உலக வர்த்தக மையத்தின் தாக்குதலுக்குப் பின்னார தூசுப்படலத்தின் துகள்களை ஆரய்ந்த போது கீழிருந்து தாக்குதல் நடந்திருப்பதற்கான தெரமிக் மிகுதிகளைக் கண்டுபிடித்தனர்.
தவிர மூன்று கோபுரங்களும் கீழிருந்து கட்டுப்படுத்தப்படே தகர்க்கப்பட்டன எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பல சாட்சிகள் தாக்குதல் குறித்த வேறுபட்ட படம் ஒன்றை வழங்கின.
2011 ஆம் ஆண்டு தாக்குதல்களின் பத்தாவது ஆண்டு நிறைவாக பிரித்தானிய பொதுத் தொலைக்காட்சியான பிபிசி இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டது.
(1) ‘9/11: Conspiracy Road Trip’ (2)‘The Conspiracy Files: 9/11 Ten Years On’
Architects & Engineers for 9/11 Truth (AE911Truth) என்ற அமரிக்காவைத் தளமாகக் கொண்ட அமைப்பு பிபிசியின் தகவல்கள் தவறானவை என்றும் உண்மையான ஆதாரங்கள் என்று பலவற்றை வழங்கியது. இந்த ஆதாரங்களை மக்கள் முன்வைக்குமாறு பிபிசி ஐ கேட்டுக்கொண்டனர். பிபிசி யின் சட்ட ஒப்பந்தப்படியும் ஊடக தர்மத்தின் அடிப்படையிலும் தவறான தகவல்கள் மக்கள் முன்னர் திருத்தப்பட்டு முன்வைக்கப்பட வேண்டும்.
வழங்கப்பட்ட தகவல்களை பிபிசி உதாசீனம் செய்தது.
இதன் பின்னர் பிபிசி இன் ஆவணப்பட தயாரிப்பாளரான ரொனி ரூக் இத் தகவல்கள் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற முடிவில் போராட ஆரம்பித்தார்.
பிரித்தானிய பிரஜைகள் அனைவரும் தொலைக்காட்சி பயன்படுத்துவதற்கான வரி ஒன்றை அரசுக்குச் செலுத்த வேண்டும். இந்த வரி பிபிசி இன் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும். ரொனி இந்தப்பணத்தைச் செலுத்த மறுக்கும் போராட்டத்தை ஆரம்பித்தார்.
பிரித்தானியாவின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 15 ஆவது பிரிவின் படி பயங்கரவாத அமைப்புக்கள் எனச் சந்தேகப்படும் அமைப்புக்களுக்குப் பணம் வழங்குவது சட்டப்படி குற்றம்.
இந்த வகையில் இரட்டைக் கோபுரத்தாகுதல் குறித்த உண்மை தெரிந்திருந்தும் அதனை மூடி மறைக்கும் பிபிசி இன் நடவடிக்கை அத் தாக்குதலின் பயங்கரவாதக் கூறுகளை மறைப்பதாகும் என ரொனி வாதிட்டார்.
இதனாலேயே தொலைக்காட்சி வரி கட்டவில்லை என்று அரச நிறுவனங்களுக்குத் தெரிவித்தார்.
ஆனால் பிரித்தானிய சட்டப்படி வரிகட்டாமை என்ற குற்றச்செயலுக்கு உள்ளானதால் ரொனி மீதான வழக்கு எதிர்வரும் 25ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது. ரொனி வாதிடுவதற்காக அவருக்கு மூன்று மணி நேரம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.
ஆதாரங்கள் அனைத்தையும் சேகரித்து இந்த மூன்று மணி நேரத்தில் திரையிடுவதற்கான ஆவணப்படம் ஒன்றை ரொனி தயாரித்துள்ளார்.
ரொனியின் ஆதரவுக் குழுவில் பேராசிரியர் நீல் ஹாரிட்ஸ் உம் ஒருவர்.
இவரோரு ரொனி பாரெல் என்பவரும் உள்ளார்.
ரொனி பாரெல் யோக்ஷ்யர் போலிஸ் பிரிவில் உளவுத்துறை ஆய்வாளராகக் கடமையாற்றியவர். தனது ஆய்வறிக்கை ஒன்றில் 9/11 மற்றும் பிரித்தானியாவில் நடந்த 7/7 தாக்குதல்கள் அமரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளக அரசுக் கூறுகள் திட்டமிட்டு நடத்தியவை என்றும், இஸ்லாமிய தீவிர்வாதிகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் அவை அமரிக்க பிரித்தானிய உள்ளக திட்டமிட்ட செயல்கள் என்றும் பதிந்திருந்தார். இதனால் வேலையிழந்த ரொனி பரெல் இப்போது இந்தவழக்கில் ஆதரவாகச் செயற்படுகிறார்.
இவர்கள் இருவரோடும், Richard Gage, AIA: Founder/CEO of Architects & Engineers for 9/11 Truth, Dwain Deets: Former NASA Director of Aerospace Projects, Erik Lawyer: Founder of Firefighters for 9/11 Truth, ake Jacobs: Veteran US airline pilot and member of Pilots for 9/11 Truth போன்ற பலர் ரொனிக்கு ஆதரவாக வழக்கில் செயற்படுகின்றனர்.
வழக்கின் முடிவு எவ்வாறாக இருப்பினும் இந்த வழக்கு பொதுமக்களுக்குப் பல தகவல்களைத் தெரிவிப்பதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
9/11 தாக்குதல்களை முன்வைத்தே உலகம் முழுவதையும் இராணுவமயப்படுத்திய அமரிக்காவே இப்போது குற்றவாளிக் கூண்டில். குற்றவாளிக்குப் பதிலாக நிரபராதி தண்டிக்கப்பட்டாலும் ஒரு பகுதி மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு இது.