ஐக்கிய அமெரிக்காவின் பரப்பளவிற்கு நிகரான பெரிய ஆப்பிரிக்க நாடான கொங்கோ, உலகில்
உலகில் இனப்பிரச்சினை என்று அறியப்பட்ட யுத்தங்கள் பல பணப்பிரச்சினை காரணமாக நடப்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஏற்கனவே சியாரா லியோனில் வைர சுரங்கங்களுக்காக நடந்த சண்டையை, இனப்பிரச்சினை என்று சர்வதேச ஊடகங்கள் செய்த பிரச்சாரத்தை முறியடித்து “Blood Diamond” திரைப்படம் உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. இருந்தாலும் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த சர்வதேச ஊடகங்கள் கொங்கோவில் நடக்கும் போரையும் “இனப்பிரச்சினை” என்றே பிரச்சாரம் செய்கின்றன. அவர்களைப்பொறுத்த வரை கொங்கோலிய அரசபடைகள் பொதுமக்களை துன்புறுத்துகின்றன, சொத்துகளை கொள்ளையடிக்கின்றன, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றன, அதற்கெதிராக “லோறன்ட் குண்டா” தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் போராடுகின்றனர். அங்கே நடப்பது இனப்பிரச்சினை. (துட்சி) சிறுபான்மை இனத்தை, (நிங்காலா மொழிபேசும்)பெரும்பான்மை இனம் அடக்கி இனப்படுகொலை செய்கின்றது.
அங்கே மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் இல்லை என்று நான் இங்கே கூறவரவில்லை. ஆனால்
கடந்த பத்தாண்டுகளாக கொங்கோ போரில் நான்கு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் அதிக அக்கறை எடுத்து அறிவிக்கவில்லை. தற்போதும் அதுதான் நடக்கின்றது. சில மனித உரிமை ஸ்தாபனங்களின் விடாமுயற்சியால் ஐ.நா.சபை தலையிட்ட போது மட்டும் சிறிதளவு கவனிப்பு இருந்தது. அதுகூட கிழக்கு கொங்கோவில் அரசபடைகளின் கட்டுப்பாட்டை குறைத்து, கிளர்ச்சிப் படைகளுக்கு(என்று சொல்லப்படுவன) சுரங்கங்களை பராமரிக்கும் உரிமை வாங்கிக் கொடுக்கும் வகையிலேயே அந்த “சர்வதேச தலையீடு” இடம்பெற்றது. சமாதானப்படைகள் என்ற பெயரில் வந்த பன்னாட்டு இராணுவத்தினர்(இந்தியா கூட படை அனுப்பியது) சமாதானத்தை நிலைநாட்டினார்களோ இல்லையோ, கன்னிப் பெண்கள் மீது பாலியல் இச்சையை தீர்த்து தமது ஆண்மையை மட்டும் நிலைநாட்டினார்கள். மறந்தும் கூட கனிமவளங்கள் கொள்ளையடியடிக்கப்படும் சுரங்கங்கள் பக்கமே போகவில்லை. அது கூட பரவாயில்லை. அந்த சுரங்கங்களை நிர்வகிக்கும் கிரிமினல் கும்பல்களுக்கு ஆயுதம் விற்று மேலதிக வருமானம் தேடிக்கொண்டனர். இப்படி வேலியே பயிரை மேய்ந்த கதைகள் வெளிவந்த போது ஐ.நா.சபை நாணத்தால் கூனியது.
கிழக்கு கொங்கோவில் எந்த ஒரு அரசியல் சக்தியினதும் முழுமையான கட்டுப்பட்டு கிடையாது. கொங்கோ அரசாங்கத்தின் கனிமவள அமைச்சு நிர்வகிக்கும் சுரங்கங்கள் கூட அரசபடையில் இருக்கும் கொமாண்டர்களின் லாபநோக்கின் கீழ் சுரண்டப்படுகின்றன. தலைநகர் கின்சாசாவில் இருக்கும் மைய அரசோ, அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்கும் போர் என்று தான் கூறிவருகின்றது. இதில் ஓரளவு உண்மை இருப்பதால் சாதாரண பொதுமக்கள் போருக்கு ஆதரவளித்து வந்துள்ளனர். ஒரு காலத்தில் நட்பு நாடுகளான அங்கோலா, சிம்பாப்வேயும் தமது படைகளை அனுப்பி வைத்ததால், “ஆப்பிரிக்காவின் உலகப்போர்” என்றும் அழைக்கப்பட்டது. அப்போது கொங்கோ அரசு தோழமை நாடுகளின் இராணுவ உதவிக்கு மாறாக தெற்கில் சில சுரங்கங்களை வாடகைக்கு கொடுத்திருந்தது.
இந்தப் பிரச்சினையில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், கொங்கோ அரசபடையாக இ
கொங்கோ போர் தீவிரமடைவதற்கு முக்கிய காரணம் கொல்த்தான் என்ற மூலப்பொருள். இதிலிருந்து தான் இலத்திரனியல் கருவிகளில் பயன்படுத்தப்படும் “சிப்” தயாரிக்கப்படுகின்றது. உலக சந்தையில் நடமாடும் தொலைபேசி(மொபைல்), மடிக் கணணி(லப் டாப்) போன்றவற்றின் விலை கணிசமாக குறைந்து, விற்பனை அதிகரித்ததற்கும், கொங்கோ மக்கள் கொல்லப் படுவதற்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மூலப்பொருட்களுக்கு உரிய விலை கொடுக்கப்பட்டு, நியாயமான வியாபாரம் நடக்குமாயிருந்தால் இலத்திரனியல் பொருட்களின் விலை இப்போதும் (நாம் வாங்க முடியாத அளவு) அதிகமாக இருந்திருக்கும். ஆனால் கொ