Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழப் போராட்டம் குறித்த இன்னொரு ஆய்வு – புளொட் இயக்கத்தை முன்நிறுத்தி : அசோக் எழுத்தும் வரலாற்றுத் தொடர்

தமிழ்ப் பேசும் மக்கள் மீதான பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் கிழக்கிலிருந்து கருவுற்றது எவ்வாறு? இருளின் விழிம்பிலிருந்து இன்னமும் வெளிவராத, யாழ்.மையவாத சிந்தனைக்குள் முடக்கப்பட்டிருக்கும் தியாகங்கள் இப்போது நமது சமூகத்தின் முன் பேசப்பட வேண்டியவை.

இனியொரு இணையத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியவரான கணேசன் – அய்யர் ஆரம்பித்த தொடர் ஈழப் போராட்ட அரசியல் வரலாற்றில் நிராகரிக்க முடியாத அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. மேலும் செழுமைப்படுத்தப்பட்ட கணேசனின் தொடர் நூலுருவில் வெளியான போது மக்கள் உணர்வுள்ள அனைவரின் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. தவறவிட்டவற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்கான  உரையாடல் வெளியை அது ஏற்படுத்தியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதனைத் தொடர்ந்து முன்னைவற்றை உரசிப்பார்க்க முற்பட்டோர் பலர்.

புளொட்(PLOTE) இயக்கத்தின் அதிகார வெறிக்குள் அழிக்கப்பட்ட அப்பாவிப் போராளிகள் குறித்த சம்பவத் தொகுப்பாக கோவிந்தனின் “புதியதோர் உலகம்” வெளிவந்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. இதன் பின்னதாக இலங்கை அரச தூதரகத்தின் முற்றத்தில் கூடாரம் அமைத்துக்கொண்டு வரலாற்றை அலசுவதான மூன்றம்தர கிசுகிசுப் பாணியிலான அருவருப்புக்களைக் காண்கின்றோம். இந்த நிலையில் சுய இலாப நோக்கங்களுக்கு அப்பால் புளொட் இயக்கத்தின் வரலாற்றின் பெரும்பகுதியை தனது இளமைக்கால வரலாறாகக் கொண்ட யோகன் கண்ணமுத்து (அசோக்) எழுதும் வரலாற்றுத் தொகுப்பு இனியொரு இணையத்தில் தொடராக வெளிவரவிருக்கிறது.

Exit mobile version