இதே காலப்பகுதியில் இந்திய அரசு ஈழப்போராட்டத்தை தனது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்துவதற்காக ஈழப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்கியது. ரெலோ, ஈரோஸ், புலிகள், ஈபிஆர்எல்எப் ஆகிய விடுதலை இயக்கங்கள் இந்திய இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டன.
சீக்கியர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை பிரித்தானிய அரசின் துணையோடு மூர்க்கத்தனமாக அழித்த இந்திரா காந்தியின் அரசு ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக நாடகமாடியது. இந்த நிலையில் இலங்கையில் பிரித்தானியாவின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்பது ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது..
சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிய தமிழ் இயக்கங்களை அழிப்பதற்காக இலங்கை அரச படைகளுக்கு பிரித்தானிய நிறுவனம் பயிற்சி வழங்குவதை அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய அரசு பிரித்தானியாவைக் கோரியது.
புதிதாக வெளியான தகவல்களின் அடிப்படையில், 1984 ஆம் ஆண்டு பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரவிருந்த ஜெவ்ரி ஹவ் இன் பிரத்தியோகச் செயலாளர், பிரதமர் மாக்ரட் தட்சருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக் கடித்தத்தின் அடிப்படையில் இலங்கை அரச படைகளுக்குப் பயிற்சியளிப்பதற்கு SAS உடன் தொடர்புடைய நிறுவனத்தை அனுமதிக்குமாறு கோருகிறார். வெளிவிவகாரச் செயலாளரின் பிரத்தியோகச் செயயலாளரான பீட்டர் ரிக்கி மாக்ரட் தடசரின் பிரத்தியோகச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தின் பகுதி : –
“இலங்கை அரசு மற்றொரு நிறுவனத்தையும் (வெளியான ஆவணத்தில் பெயர் நீக்கப்பட்டுள்ளது) இராணுவப் பயிற்சியளிக்க அமர்த்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதற்காகவே இப்பயிற்சி வழங்கப்படுகிறது.முன்னை நாள் SAS இன் ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம் இலங்கையில் நிலைகொண்டிருப்பது தொடர்பாக இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. நாம் இது முற்றுமுழுதான வியாபார ஒப்பந்தம் என்பதால் நாங்கள் பயிற்சி வழங்க அனுமதித்துள்ளோம்என இந்திய அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளோம், “
1984 ஆம் ஆண்டில் அதாவது சீக்கியப் படுகொலை நடத்த இந்திராகாந்தி உத்தரவிட்ட அதே காலப்பகுதியில், இலங்கை அரசிற்கு இராணுவ உதவிகளையும் ஆலோசனைகளையும் நிறுத்துமாறு மாக்ரட் தட்சருக்கு இந்திராகாந்தி எழுதிய கடிதம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இவற்றின் தொகுப்பை நோக்கும் போது இந்திய அரசு தெற்காசியாவில் தான் மட்டுமே அழிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பிரித்தானியாவைக் கோருகின்றது. பிரித்தானியாவோ தனக்கும் அழிப்பதில் பங்கு தேவை என்பதில் உறுதியாக இருக்கின்றது.
30 வருடங்களுக்கு ஒரு முறை முக்கிய தகவல்கள் நீக்கப்பட்டு வெளியாகும் இந்த ஆவணங்களிலிருந்து பருமட்டான சில தகவல்களைத் தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
எது எவ்வாராயினும் முப்பது வருடங்கலின் பின்பும் முன்னைய நாடகம் மீண்டும் அரங்கேறுகிறது. ராஜபக்ச என்ற இனக்கொலையாளியை, கிரிமினலை பொதுநலவாய நாடுகளின் தலைமைப்பதவியில் அமர்த்திவிட்டு தூக்கில் போடப்போகிறோம் என்று பிரித்தானியா நாடகமாடுவதும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
தொடர்புடைய பதிவுகள் :