அணி சேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க, வரும், 29ம் தேதி ஈரான் செல்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். அங்கு, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலிசர்தாரி உட்பட, பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணி சேரா நாடுகளின் 16வது மாநாடு, வரும், 29ம் தேதி, ஈரான் தலைநகர் டெஹரானில் துவங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் அன்று டெஹரான் செல்கிறார். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருக்கும் பிரதமர், மாநாட்டில் பங்கேற்பதோடு, இரு தரப்பு உறவுகள் தொடர்பாக, ஈரான் அதிபர் முகமது அகமதிநிஜாத் உடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மத்திய கிழக்கில் யுத்தத்தை உருவாக்கி மக்களை அழித்துவரும் அமரிக்கா ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. தனது நண்பனான இந்திய அரசும் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் அமரிக்கா எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் மன்மோகனின் பயணம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.