Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இழப்பீடு வழங்கக் கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்

காவிரி நீர் இல்லாமல் வாடும் நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி நாகை, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலுள்ள ஆட்சியர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நீரின்றி கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலு‌ம், த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்ட ‌விவசா‌யிக‌ளி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு 10 ல‌ட்ச ரூபா‌ய் வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌விவசா‌யிக‌ள் கோ‌ரி‌க்கை வை‌த்தன‌ர்.
நாகையில் விவசாயிகளுடன் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதே போன்று காய்ந்த பயிர்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் விவசாயிகள் மனு கொடுக்க வந்ததை போலீசார் தடுத்ததால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அனுமதி மறுக்கப்பட்டதால் நெற்கதிர், வாழை கன்றுகளுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Exit mobile version