Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இழந்த செல்வாக்கை மீளமைக்க ராமதாஸ் போராட்டம்

ramadossபூரண மதுவிலக்கு கோரி டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட முயன்ற பா.ம.க தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். ராமதாஸூடன் ஏராளமான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
சாதிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தனது உயர் சாதி வெறியால் தர்மபுரியில் தாழத்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திவரும் அதே வேளை தேர்த்தல் செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்ள பரபப்பு நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளது. அதன் விளைவே இந்தப் போராட்டங்கள் என பரவலாக நம்பப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் அரசே மதுக்கடையை மூடும் வரை திட்டுமிட்டு பா.ம.க போராட்டத்தை நடத்தும் என்று அவர் கூறினார். அதே போல், விழுப்புரத்தில் மதுக்கடைக்குப் பூட்டுப் போட முயன்ற பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள கடைக்கு பூட்டுப் போட முயன்ற பா.ம.க தொண்டர்கள் 500 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version