ஈழத்தில் விடுதலைப் போராட்டங்களின் ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் ஆங்காங்கே எரியுட்டப்பட்ட நிலைகளில் கண்டெடுக்கப்பட்டுகாலப்போக்கில் அவை சாதாரண நிகழ்வுகளாகின.இவை இலங்கைப்படைகளால் நிகழ்த்தப்பட்டன. பின்னர் யாழ் குடாப்பிரதேசத்தில்இருந்து அனைத்து விடுதலை இயக்கங்களாலும் இராணுவம் விரட்டியடிக்கப்பட்டபின் இயக்க உள் முரண்பாடுகளால் மின்கம்பத்தில் பிணங்கள் தொங்கின. அவையும் சாதாரணமாகிப்போயின. எண்பத்து மூன்றுகளின் பின்னான புலப்பெயர்வு அதிகரிப்பின் பின்னர் புலம்பெயர்தேசங்களில் எம்மவர்கள் கடுமையான தொழிலாளிகளாகவே அத்தேசங்களில் அறியப்பட்டார்கள். இக் கால கட்டங்களில் யாழ்ப்பாணத்தின் மிக இறுக்கமான சாதி முரண்பாடுகளும் இவர்களிடையே அதிகம் தலை தூக்கியிருக்கவில்லை. கடுமையான உழைப்பின் பெறுமானங்களால் தங்களது மனைவி பிள்ளைகள் சகோதர சகோதரிகள் என இவர்களை புலத்துக்கு அழைக்கும் முயற்சிகளை மேற்கொண்டபோது பல்வேறு நாடுகளில் ஆண்டுக்கணக்கில்மாதக்கணக்கில் தங்கியிருந்து பிரயாண முகவர்களால் சீரழிக்கப் பட்டு ஒரு தலைமுறை புலத்துள் புகுந்த போது அது ஈழத்தின் வன்முறையின் எச்சங்களையும் காவி வந்து ஆங்காங்கே பதியனிட்டுக்கொண்டது.
ஆரம்பப் புலப்பெயர்தமிழர்கள் தங்குவதற்கு போக்கிடமின்றியும் மொழிப்புரிதலின்மை காரணமாகவும் ஒருவரையொருவர் இறுகப்பற்றியிருக்க வேண்டிய தேவை இருந்தது. அப்போது சாதி, பிரதேச வேறுபாடுகள் ஓடியொழித்துக்கொண்டன. ஆனால் தொண்ணூறுகளுக்குப் பின்னர் வருகை தந்தவர்களுக்கு வதிவிடப்பிரச்சினையோ மொழி பெயர்ப்புப்பிரச்சினையோ இருக்கவில்லை. (இதற்குள் பிரான்சில் பிரெஞ்சு மொழி தெரியாத இலங்கைத்தமிழர்களிடம் பிரெஞ்சுக் கொலனியவாசிகளான பாண்டிச்சேரித்தமிழர்கள் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றுகின்றோம், உதவி புரிகின்றோம் என்கின்ற போர்வையில் ஈழத்தமிழரின் கடின உழைப்பின்பலன்களை மனிதாபிமானமின்றி மிக இலகுவாகத் திருடியும் கொழுத்தார்கள்.) பிற்காலப்புலப் பெயர்வாளர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை தேட வேண்டியது அவசியம் என்கின்ற நிலமையும் இருக்கவில்லை. அவர்களைத் தாங்குவதற்கு தந்தையோ சகோதரனோ இருந்தார். எனவே அவர்களுக்கான ஓய்வு நேரங்களும் ஒருவரையொருவர் சந்திக்கும்திறனும் அதிகரித்தன. புலப்பாடசாலைகளுக்குப்படிக்கப்போன இளைஞர்களுக்கு அப்பாடசாலைகளின்நெகிழ்வுத் தன்மைகள் ஆச்சரியங்களைக்கொடுத்தது.
இலங்கைப்பாடசாலைகளில் கடுமையான ஒடுக்குதல்களுக்குள் கல்வியைப் பெற்றவர்களும் ஆயுத வன்முறைகளுக்கு இடையில் கல்வியைத் தொலைத்தவர்களும் புலம்பெயர் பயண இடைநடுவில் பல்வேறு நாடுகளில் தங்கியிருக்க நேர்ந்ததனால்கல்வியை இடை நிறுத்தியதன்பின்னர் அந் நாடுகளுக்குள் புகுந்த பின் திரும்பவும்பாடசாலைகளுக்குள் புகுந்தவர்களுக்கு மேற்கத்தைய நாடுகளின்பாடசாலைகள்அளித்த சுதந்திர நடவடிக்கைகளும் அவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தினைத் தடுத்து அந்தச் சுதந்திரங்களை தமது வயதுக் கேற்ற வழிகளில் எவ்வாறு செயற்படலாம் என்ற தோற்றுவாயையே ஏற்படுத்தியது. மொழி புரியாத பெற்றோரினால் பிள்ளைகளைச் சரியான கல்வியின் வழியில் கொண்டு செலுத்தவும் முடியவியல்லை.இயக்கங்களின் குழு வன்முறைகளைப் பிரதியெடுத்தவர்களாக
சாதிவாரியான, பிரதேசவாரியான வன்முறைகளும்வெடிக்கத்தொடங்கின. ஆரம்ப காலங்களில் சாதியை ஒளித்து வைத்தவர்களும் இப்போது வசதி வந்து விட்ட தைரியத்தில் புலத்தில் தமது புதிய சந்தததிகளுக்கு அதனைக் கற்றுக் கொடுக்கவும் சாதியக் குப்பையான இந்துவத்தினைப் பேணுவதற்கான ஆலயங்களை அமைப்பதற்கும் தொடங்கினார்கள்.
இது மட்டுமல்லாது தாராளமான மது, போதை மருந்துகளின் பாவனைகளும் அதிகரித்துக்கொண்டது. தேடுதல் குறித்த பிரக்iஞைகளற்ற பொருளாதாரத் தேடுதலையே குறிக்கோளாகக்கொண்ட பெற்றோர். தமக்குக்கிடைத்த சுதந்திரத்தை மட்டுமே பற்றிக்கொண்ட இளம்சந்ததி. புலம் பெயர் தமிழர்களின் பொருளாதாரச் செழிப்புக்களில் கண்வைத்துக்கொண்ட மதவாத அமைப்புக்கள் இவற்றுக்கிடையே இளைஞர் வன்முறை இன்று தலைவிரித்தாடுகின்றது. இதனை ஒளிப்பதற்கும் சீர்படுத்துவதற்கும் வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களுடன் சரியான உறவுகளைப் பேணி அவர்களை மீட்டெடுக்கும் முயற்சிகளில் யாரும் ஈடுபட முன்வரவில்லை.
நான்சொல்ல வந்த விடயத்தைச்சொல்லி விடுகின்றேன். அண்மையில் மரண நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது புலம்பெயர் படைப்பாளிகள் கலைஞர்களையும் அங்கு அதிகமாகக் காண முடிந்தது. அப்போது