தர்மபுரி: இளவரசன் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்றுக் கொண்டு உடலை பெற்றுக் கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் இளவரசனின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் மர்மமான முறையில் இறந்து போன இளவரசனின் மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கக் கோரி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இளவரசன் உடலை பெற்றுக் கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் இன்று அறிவித்திருக்கிறார். மேலும் இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்பதாக கூறிய அவர், இளவரசனின் இறுதி நிகழ்வில் அரசியல் கட்சிகள் பங்கேற்கும் வகையில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆதிக்க சாதி வெறியர்களான ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இளவரசன் மரணத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்ப்தாகக் கருதியே மக்களும் புரட்சிகர அமைப்புக்களும் சுதந்திரமான பிரதப் பரிசோதனைக்கு கோரிக்கைவிடுத்தனர். மக்கள் திரள்களாகப் போராடினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன் கட்சி ஈழப் பிரச்சனையில் நடந்துகொண்டது போன்றே திடிரென இளவரசனின் உடலைப் பொறுப்பெடுக்க ஒத்துக்கொண்டுள்ளது.