Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை வரலாற்றில் மாற்றி எழுதப்பட்ட சுதந்திர வீரன் சரதியல் ஒரு சகாப்தம்:எஸ்.கிங்ஸ்லி கோமஸ்

mahawamsamஅழகான அந்த மாலைப்பொழுது தேசத்தின் எல்லா பகுதியிலும் ஆங்கில அடக்குமுறையாளர்களின் துப்பாக்கியின் அகோரம் அடக்கி வைத்திருந்த காலகட்டம். ஆனாலும் வெள்ளையர்களை துச்சமாக மதிக்கும் ‘சரதியல்’ என்ற பெயர்கொண்ட ஒரு குடி மகன் தனது காதலி சிரிமலியுடன் வனாந்தரத்தில் கதைப்பேசிக் கொண்டிருந்தான்.

‘கிரிமலி நான் பயங்கரவாத செயல்களிலும் தீமையான செயல்களிலும் இனிமேழும் ஈடுபடபோவதில்லை. ஊன் கண்களின் மேல் ஆணை, இனி எவரையும் நான் துன்புருத்த மாட்டேன்’ என்று சரதியெல் கூறினான்.
‘நீங்கள் என்றும் பயங்கரவாதி அல்ல, நீங்கள் யாருக்கும் தீமைசெய்யவும் இல்லை, யாரையும் துன்புருத்தவும் இல்லை. வெள்ளைகாரர்களினதும் அவர்களின் அடிவருடிகளின் கொடுமைகள் காட்டி கொடுப்புகள் காரணத்தினால் தானே நீங்கள் இப்படி ஆனிர்கள்.’ ஏன்று சிரிமலி கூறினாள். – இந்த உரையாடலை இது சரதியல் தொடர்பான ஒரு கருத்தினை வாசகர் மத்தியில் பகிர்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாக கொள்ளலாம்.

வர்க்க நிலைப்பாடும் இருட்டடிப்பும்

வரலாற்றில் சரதியல் என்ற போராளி இருட்டடிப்பு செய்யப்படுவதற்கான காரணங்கள் பற்றிய ஆய்வு ரீதியாக நோக்கும் போது வர்க்க ரீதியான ஒடுக்கு முறையினை மிகவும் மோசமாக இலங்iகையின் உயர் குடியினர் மேற்கொண்டமையினை காணலாம். வெள்ளையர் காலத்தில் சிங்கள சமூகத்தினை காட்டி கொடுத்து வெள்ளையர்களுக்கு அடிமைகளாக இருந்து சுகபோகம் அனுபவித்த முகாந்திரம், முதலி, விதானே என்பவர்களுக்கும் இவர்களுடன் இணைந்த கொள்ளை வியாபாரிகளாக காணப்பட்ட கருப்பு கடை வியாபாரிகளும் தங்களின் சுயநலத்திற்காகவும் வர்க நலனுக்காகவும் சமூகத்தில் அதிகமான தீய செயல்களை செய்து வந்ததாக வரலாறு கூறுகின்றது.

இதற்கமைய 1832ம் ஆண்டு ஹதிசி அப்பு என்னும் வண்டி செட்டும் தொழிலாளிக்கும் பிசோஹாமி என்னும் பெண்னுக்கும் பிறந்த முதலாவது ஆண்பிள்ளை சரதியல். சரதியலுக்கு பேதுரு, கேப்ரியல், மார்த்தா என்னும் மூன்று சகோதர சசோதரிகள் இருந்தனர். இவர்கள் மாவனெல்ல பிரதேசத்தின் உதவத்த கிராமத்தில் மொல்லி கொட எனும் பிரதேசத்திலேயே இவர்கள் குடிசை கட்டி வாழ்ந்து வந்தனர்.

சிங்கள சமூகத்தில் வண்டி லுட்டி என்பவன் ஓடுக்கப்பட்ட சமூகத்தினை சேர்ந்தவனாகவே கருதப்படுகின்றான். இவர்களை கரத்த கரயா, என்றும் ஓய் என்றுமே அழைப்பார்கள். இந்;த வண்டிலுட்டும் தொழிலாளி மலையகத்தில் இருந்து கோப்பி கொட்டடைகளை கொண்டு செல்லும் கடின தொழிலை செய்து தனது குடும்பததிnனை மிகவும் கஷ்டத்தின் மத்தியில் காப்பாற்றி வந்துள்ளான். ஆந்த பொருளாதாரர கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது பிள்ளைகளை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்ற காரனத்தினால் சரதியலை கிராம்து புதட்தர் ஆலயத்தில் கல்வி கற்பதற்கு சேர்த்துவிட்டார்.

சுதந்திர போராட்டத்தில் சரதியல்

வெள்ளையரகளுக்கு எததிரான சுதந்திர போராட்டம் பற்பல் ரூபங்களில் முன்னெடுக்கப்பட்டது. ஆமைப்பு ரீதியாகவும் தனிமனிதர்களாகவும் கிராமங்கள் குடும்பங்கள் என்ற அடிபப்டையிலும் முன்னெடுக்கப்பட்ட போதும் தனிதமனித போராட்டங்கள் வெள்ளையர்களின் அடிவருடிகளினதும் சுரண்டலுக்கு எதிரானவையாகவே காணப்பட்டுள்ளது. இதற்கமைய சரதியலின் வாழ்க்கையும் சுரண்டலுக்கு எதிரானதாகவே காணப்பட்டுள்ளது.

சுரதியல் கல்வி கற்றதனை உயர்குலத்தினருக்கும் பிரதேச வியாபாரிகளுக்கும் ஏற்றுகொள்ள முடியாத நிலைமையினை தோற்றுவித்தது. இதன் காரணத்தினாலேயே சரதியலை பொய் சாட்சிகளை புனைந்து ரண்பண்h என்னும் சகமாணவனுடன் சரதியலுக்கு ஏற்பற்ட சாதாரண சண்டையை பெரிதுபடுத்ததி, ரண்பண்டாவின் வெள்p அருனாக்கொடியை திருடிவிட்டான் என்று பொலிஸ் நிலையத்தில் புகார் செய்து சிறையில் அடைத்து ஒரு திருடன் என்று முத்திரை குத்தினர். இதன் பின்பு சராதியலால் கலட்வியை தொடர முடியவில்லை. இருந்தும் பௌத்த விகாரையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்த சரதியல் பௌத்த பிக்குகளின் மதபோதனைகளுடாகவும் தேசப்பற்றும் விடுதலை வேற்கையும் வெள்ளையர்களின் அடிவருடிகளை பலிவாங்க வேண்டும் என்ற அவாவும் பணம் படைத்தவர்கள் சுரண்டிப் பிழைப்பவர்கள் என்போரிடம் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சொத்துக்களை சூரையாடி ஏழை களுக்கு பகிர்ந்து கொடுப்பதனை தனது தலையாய கடமையாக செய்ததன் காரணத்தால் சாதாரண ஏழை கிராம வாசிகள் மத்தியிலும் கோப்பித் தோட்ட தொழிலாளர்கள்டி மத்தியிலும் சிறந்த மதிமப்பையும் வீரன் என்ற பெயரையும் பெற்று கொடுத்தது.

சிங்கள வரலாற்று புத்தகமான மகாவம்சத்தில் சரதியல் பற்றிய எந்தவித பதிவுகளும் பதியப்படவில்லை. இதற்காண காரணங்கள் மிக முக்கியமாக சரதியல் ஒடுக்கப்ட்ட சமூகததில் பிறந்தது, வர்க ரீதியில் உழகை;கும் வர்க்கத்தில் பிறந்தது, உட்பட சிங்கள தலைமைகளாக இருந்து ஆங்கில அரசுக்கு உதவி செய்த சிங்கள நாட்டாமைமாருக்கு எதிராக இருந்தது ஏழைகளின் பணத்ததை சுரண்டிய சுகபோகர்களிடம் கொள்ளையடித்து மக்களுக்கு கொடுத்தது என்ற காரணங்களை அடையாளப்படுத்தலாம்.

இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான பொலிஸ் தினம் கொண்டாடப்படுவது மார்ச் மாதம் 21ம் நாள் ஆகும். ஏழைகளின் தோமன் வீர சரதியலை கைதுசெய்வதற்காக சென்று உயிர் துறந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் இறந்த தினம் வரலாற்றில் தடம் பதித்த ஒரு தினமாகும். இலங்கை திரு நாட்டின் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் அரச தலைவர்களும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்துவது சுதந்திர வரன் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி வீரசரதயலை கொலைசெய்ய கைதுசெய்யச் சென்று மரணம் தழுவியவர் என்பதினால் சரதியலின் பெயரை மகாவம்சத்தில் இருந்து அகற்றியவர்கள் வரலாற்றில் இருந்து சரதியலை அகற்ற இயலாது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இலங்கை வரலாற்றில் இருட்டடிககப்பட்ட பல பக்கங்கள் உள்ளது. மகாவம்சத்தில் பதியப்படாத பல நிகழ்வுகளும் உள்ளது. மொத்தத்தில் மகாவம்சம் எழுதிய மேட்டுகுடிகளுக்கும் ஆட்சி புரிந்த உயர் வர்க்கத்தினருக்கும் தேவையான விடயங்களை மாத்திரம் பதிவு செய்த ஆவணமாக அடையாளப்படுத்துவதற்கு சரததியலின் வரலாறு சிறந்த உதாரணமாகும். சிங்களம் பேசிய சிங்கள வீரனை வர்க்க நிலைமை காரணமாக இருட்டடிப்பு செய்த சிங்கள தேசம் தமிழ் மக்களின் வரலாற்றையும் இலங்கைநாட்டின் தமிழ் ஆட்சி காலத்தையும் ராவண சரித்திரம் முதல் இன்று வாழும் மலையக தமிழர்கள் நாட்டை செம்மைபடுத்தி பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்தியது வரை மூடி மறைக்க தயங்காது என்பதனை புரிந்து இயங்குதல் வேண்டும்.

மொத்தத்தில் மதம் இனம் சாதி என்பற்றிற்கு அப்பால் வர்க்கரீதியாக மனிதர்களை ஒடுக்கும் நிலைமை அன்று முதல் இன்று வரை நிகழ்வதனை காணலாம். இன்றைய நவீன நுகர்வு சுரண்டல் காலகட்டத்தில் வாழ்வோர் ஓரு வர்க்மாகவும் விற்போர் மற்மோர் வர்க்கமாகவும் நோக்கும் போது விற்பதற்கான கபட பொரிக்குள் சிக்க வைக்கும் எத்தனத்தில் ஏமாற்றப்படும் ஏழைகளின் நிலைமை பரிதாபமானது. எனவே தமிழ், சிஙகள, இஸ்லாம் மக்களில் விற்பதனை வாங்கும் வர்க்கம் உழகை;கும் வர்க்கமாக இருபர்பதனால் எதிர்கால வரலாற்றினை மாற்றி அமைக்க மனிதர்கள் ஒன்றினைய வேண்டியதன் அவசியத்தினை சரதியலின் வரலாறு எமக்கு எடுத்து இயம்புகின்றது.

புதுவசந்தம்2014
தேசிய கலை இலக்கிய பேரவை

Exit mobile version