‘ தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவாளி கைது செய்யப்பட்டான். திருவல்லிக்கேணி விடுதி ஒன்றில் தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்ற உளவாளியை நேற்று நள்ளிரவு கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து சென்னை மற்றும் பெங்களூரு நகரின் வரைபடம், தகவல் பரிமாற்றக் கருவிகள், கள்ள ரூபாய் நோட்டுகள், அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டுள்ள உளவாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் இலங்கையிலிருந்து அடிக்கடி சென்னைக்கு வந்து உளவு தகவல்களை சேகரித்து அனுப்பிய விவரம் தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் பெங்னளூருவில் உள்ள சில இடங்களில் வெடிகுண்டு வைக்க ஜாகீர் உசேன் சதித்திட்டம் தீட்டியிருந்ததும் தெரிய வந்துள்ளது.’ எனத் தென்னிந்திய நாழிதழ் ஒன்று தெரிவிக்கிறது.
இவர் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளவர் என்று கிடைத்த தகவலின் பேரில் தமிழ்நாடு மாநில காவல்துறையின் புலனாய்வு பிரிவான கியூ பிரிவு காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்துவரும் பயணிகளை உன்னிப்பாக கண்காணிக்கும் படி, தமிழ்நாடு காவல்துறைக்கு சில வாரங்களுக்கு முன்னர் மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஹுசேன், தனது வாக்குமூலத்தில், பாகிஸ்தான் அதிகாரிக்காக செயற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், இவரிடம் இன்னும் அதிர்ச்சியான தகவல்களைத் தாம் பெற்றுள்ளதாகவும் தமிழ்நாடு பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நரேந்திர மோடி போன்ற இனக்கொலையாளிகளை இந்திய உளவுத்துறை பல்தேசியச் சுரண்டலுக்காக தீனிபோட்டு வளர்த்தது. பல்தேசிய வியாபார நிறுவனங்கள் பணப்பயிர் போட்டு சில ஆண்டுகளாகவே எஞ்சியிருக்கும் இந்தியாவையும் சுரண்டுவதற்காக மோடி என்ற களையை வளர்த்தெடுக்குமானால் இலங்கையிலிருந்து புலிகளும் முஸ்லீம்களும் தீவிரவாதத்தைக் கொண்டுவருகிறார்கள் என்று அனைவரையும் கைது செய்ய நாளாகாது.
இவர் நேற்று மாலை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு,தமிழ் அகதிகள் பலர் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்