விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெரும்பாலான போராளிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றனர். சமூகத்திலிருந்து அவர்கள் திட்டமிட்டுத் தனிமைப்படுதப் படுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை 6000 போராளிகள் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகின்ற போதும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. புலிகளின் பிரதான உறுப்பினர்கள் சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
இலங்கைப் பிரதமர் பாராளுமன்றத்தில் வழங்கிய இந்த வாக்குமூலம் இலங்கை அரச பாசிசத்தின் கோரமுகத்தை வெளிக்காட்டுகின்றது.