இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட இந்திய காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இனப்படுகொலைக்கு ஆதரவு வழங்கிய அமரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளகை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் சந்திப்புக் குறித்து ஓ பிளக் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
நடத்தப்பட்ட சந்திப்பு தவறாக அர்த்தப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்ட காலமாக தாம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், நபர்களையும் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினைவாதத்திற்கு அமெரிக்கா ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தவிர, இலங்கை அரச பாசிசம் மக்கள் மீது தொடர்ச்சியான திட்டமிட்ட அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையில் புலம் பெயர் தமிழர்கள் இலங்கை அரசுடன் இணைந்து செய்ற்பட வேண்டும் எனவும் ரொபெர்ட் ஓ பிளக் குறிப்ப்ட்டுள்ளார்.