கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். தேசிய சேமிப்பு வங்கியில் 9 சதவீத வட்டிக்கு அரசாங்கம் 750 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுகாக 500 கோடி ரூபா செலவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மாநாடு முடிவடைந்த பின்னர் அமைச்சர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்கப்படும்.
அதேவேளை மாகாண சபைத் தேர்தலை கிரிக்கெட் போட்டியாக அரசாங்கம் மாற்றியுள்ளது. அபிவிருத்தியை கண்காட்சியாக்கி தேசத்திற்கு மகுடம் கண்காட்சி தற்போது கடனுக்கு மகுடமாக மாறியுள்ளது.
மக்களின் பணத்தைச் சுரண்டி அன்னிய நாடுகளின் கடனுக்கு வட்டியாக வழங்கும் இலங்கை அரச பாசிசம் தமது மேற்கு எஜமானர்களை திருப்திப்படுத்த 500 கோடி ரூபாவைச் செலவு செய்கிறது.