Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!

சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரியும், குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்படாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும் இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கக் கோரியும் இலங்கையர்கள் ஜெனீவா நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரில் நடைபெற்றது. இதில் இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸர்லாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.

26 மணித்தியாலயம் பேருந்தில் பயணித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்ததாக இத்தாலியிலிருந்து சென்ற பெண்ணொருவர் தெரிவித்தார். இலங்கையில் காணப்படும் ஜனநாயக விரோத நிர்வாகத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காகவே தான் இதில் கலந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் உரையாற்றியவர்கள் இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ குடும்ப நிர்வாகத்தைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வென்றெடுக்கும் தேவை குறித்து சுட்டிக்காட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கையின் ஜனநாயகத்திற்கான இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

Exit mobile version