பாலியல் வன்முறைகள் தொடர்பாக ஆராயும் ஐ.நா. பொதுசெயலாளரின் சிறப்புப் பிரதிநிதி, சான்னாப் ஹவா பங்குரா அந்த அறிக்கை தொடர்பாக அறிவித்துள்ளார். யுத்தம் நடைபெறும் நாடுகளில் மிகவும் மோசமான முறையில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆண்களும் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மிக பிரதான போர்க்குற்றவாளியும், இராணுவப் பயங்கரவாதியும், இனக்கொலையாளியுமான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா இக்குற்றச்சாட்டுக்கள் தவறானவை என வாதிட்டார். கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளிகளை தமது அறைகளுகுள் பூட்டிவைத்துக்கொண்டு ஐ.நா அறிக்கையை மற்றும் வெளியிடுவது இது முதல்தடவை அல்ல.