இலங்கை அரசின் நிர்வாகத்தின் கீழுள்ள கச்சைதீவை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாபுடே ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆவணங்களை 3 வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் தமிழக வருவாய்த்துறையும் சேர்க்க அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில், 1974ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது என்றும், கச்சத்தீவு இலங்கை எல்லைக்கு உட்பட்டது என்பதால் திரும்பப் பெற முடியாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கருணாநிதி உட்பட தமிழக அரசியல் வாதிகள் இந்திய மேலாதிக்க வாதத்தை உறுதிப்படுத்தவும் வாக்குப் பெற்றுக்கொள்ளவும் ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். தமிழகத்தின் நவீன மீன்பிடி முறைகள் ஈழத் தமிழ் மீனவர்களின் வளங்களை அழித்துச் சிதைத்துள்ளது. தமிழக பெரு வியாபாரிகளோ ஈழப் பிரச்சனையைப் பயன்படுத்தி இலங்கைக் கடலில் மீன்பிடிக்க உரிமை கோருகின்றனர். . அப்பாவி ஏழை மீனவர்களை இலங்கை அரச படைகள் கொன்றொழிக்கின்றது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொள்ளும் இலங்கை அரசோ கடல்வளங்களை பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றது.
இந்த நிலையில் கச்சதீவை மீட்டு அங்கு தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
‘தமிழுணர்வு’ என்ற போலியான கருத்தியலினதும் இந்திய மேலாதிக்க வாதத்தினதும் கூட்டுக் கலவையான அரசியலை பிழைப்புவாதிகள் தமது வியாபார நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
வழக்குத் தொடர்பான தொடர்பான ஆவணங்களை 3 வாரத்துக்குள் சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.