Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம் – நாம் வேண்டியதைப் பெற்றுக்கொள்வோம் : அமரிக்கா

சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் நேற்றுமாலை வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உயர்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ் நிலைச் செயலர் வென்டி சேர்மனை சந்தித்துப் பேசியுள்ளது.
இந்த மாதம் வெளிவரப் போகும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளோம் என்பதே சேர்மனின் பிரதான கண்ணோட்டமாக இருந்தது.
இந்த அறிக்கை உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டியது மட்டுமன்றி, அதனை நடைமுறைப்படுத்தவும் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது தான் முக்கியமான செய்தி. அதனை நாம் சொல்லி விட்டோம்.
அறிக்கை தொடர்பாக மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.“ என்று விக்ரோரியா நுலன்ட் மேலும் கூறியுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கம் இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலையையும் இனச்சுத்திகரிப்பையும் நடத்தி வருகிறது என்றால், அமரிக்கா உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் அதனை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கில் அமைதியின்மை, போர், இனப்படுகொலை என்பன அமரிக்காவின் எண்ணைப்பசிக்கு உடனடி வேலைத்திட்டம்.
அமரிக்கப் பொருளாதாரம் என்றுமில்லாதவாறு கேள்விக்குள்ளாகியுள்ளது. 2012ம் ஆண்டு அமரிக்காவில் வறுமை மேலும் அதிகரிக்கும் என அமரிக்க அரசே எதிர்வுகூறுகிறது. இந்த நிலையில் உலகின் ஏனைய பகுதிகளை நோக்கியும் அமரிக்கா போரையும் அழிவையும் விரைபடுத்த சாத்தியங்கள் காணப்படுகின்றன. இலங்கைப் பிரச்சனையில் ராஜபக்ச அரசிற்கு அழுத்தமும் ஆதரவும் வழங்கும் அமரிக்கா, தனக்கு வேண்டியவற்றை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. தெற்காசியாவில் அமரிக்கா போரை உருவாக்க இலங்கையை நுளைவாசலாகப் பயன்படுத்த முனைகிறது என்ற கருத்து மேலோங்குகிறது.
தமிழ்ப் பேசும் மக்களின் தலைமைகள் அழிந்துவம்ரு அமரிக்காவின் ஆதரவிற்காக தவம்கிடப்பது கேலிக் கூத்தானது.

Exit mobile version