வடக்கில் சிவில் நிர்வாகப் பணிகளிலும் இராணுவத்தினர் தலையீடு செய்கின்றனர். வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் அதே நிலைமை நீடிக்கின்றது.விளையாட்டுத்துறை கூட இன்று இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சியாளர் பதவிகள் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் மட்டுமன்றி வெளிநாட்டு ராஜதந்திர சேவையிலும் 70 வீதமானவர்கள் தொழில்சார் தகுதியற்றவர்கள். இவர்களில் அதிகளவானவர்கள் இராணுவ அதிகாரிகள். அனுபவமும் தொழில்சார் தகைமையும் அற்ற ராஜதந்திரிகள் சேவையில் ஈடுபடுத்தப்படாமை நாட்டுக்கு பாரிய பாதகத் தன்மையை ஏற்படுத்தக் கூடும். வெளிநாட்டு ராஜதந்திர சேவையிலும் 70 வீதமானவர்கள் தொழில்சார் தகுதியற்றவர்கள். இவர்களில் அதிகளவானவர்கள் இராணுவ அதிகாரிகள். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடி உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களுக்கு தொலைக்காட்சிகளில் காண்பிக்கும் அளவிற்கு நன்மைகள் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.