‘புலிகள் இயக்க உறுப்பினர்களில் விழிப்புலனிழந்தவர்களும் படுகாயங்களிற்குள்ளாகி அங்க இழப்புடன் இருந்த மாற்றுத் திறணாளிகளும் தங்க வைக்கப்பட்டு, தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த ‘நவம் அறிவுக் கூடம்’ அமைந்திருந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த யுவதிகளே, நேற்று நள்ளிரவு அங்கு கேட்ட பயங்கரமான சத்தம் காரணமாக பயந்து உளநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.’
தமிழ்ப் பேசும் ஆண்கள் ஒருவரைக் கூட இணைத்துக் கொள்ளாமல் பெண்களைப் பலவந்தமாக இராணுவத்தில் இணைத்துக்கொண்டமை குறித்த தகவல்கள் ஆரம்பத்திலிருந்தே பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருந்தது.
இனப்படுகொலை இராணுவத்தின் பெண்கள் மீதான ஒடுக்குமுறை குறித்த பல தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளன. இலங்கையிலிருந்து சிங்களம் பேசும் தகவலாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்கள் வவுனியா இராணுவ வைத்திய சாலையில் வேலைகு அமர்த்தப்பட்டனர் என்பது குறித்த செய்தியை இனியொரு வெளியிட்டிருந்து.
இச்செய்தி பெண்களுக்கு எதிரான வன்முறை எனப் பிரச்சாரம் மேற்கொள்ளும் இலங்கை அரச ஆதரவுக் கும்பல்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை செய்திகளாக்கி இலங்கை அரசை அம்பலப்படுத்தாமல் மூடி மறைக்கச் சொல்கிறார்கள். இவர்களின் இந்தப் பிரச்சாரம் சிறிய அளவிலானதாயினும் ஆபத்தானது. இலங்கை அரசுக்கு எதிரன ஒவ்வொரு எதிர்ப்புக் குரல்களையும் வெளியாவதற்கு முன்னமே அழிக்க எண்ணும் இந்தக் கூட்டங்கள் குறித்து எச்சரிக்கை தேவை. மறைமுகமாக இனப்படுகொலை இராணுவத்திற்கு புனிதச் சான்றிதழ் வழங்கும் முகமிலிகளான இந்தக் கும்பல்கள் இலங்கை அரசின் புலம்பெயர் நீட்சிகளே.