Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று இந்தி தினமாம் தமிழ்நாடு எதிர்க்கிறது!

இந்தி தினம் என்ற ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்பதே இப்போதுதான் தெரிகிறது. அத்தோடு இந்தியை இணைப்பு மொழி என்ற அந்தஸ்தைக் கொடுத்து  பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,. இந்தியாவில் இந்தி பேசாத, இந்தி தெரியாத மக்களே அதிகம். மாநிலங்களும் அதிகம்.

இன்று இந்தி தினம் என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியை செழிப்பாக்குவதற்காக பல தரப்பு மக்களும் பங்காற்றினர். அது இந்தியை தொடர்ந்து வலிமையாக நிலைநாட்டுவதுடன், சர்வதேச அரங்கில் வலிமையான அடையாளத்தையும் தருகிறது, உங்கள் அனைவருக்கும் இந்த தின வாழ்த்துகள்,” என்று நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

உள் துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா தமது இந்தி தின வாழ்த்தில், “இந்தி தினமான இன்று, நாட்டு மக்கள் அனைவரும் அடிப்படை வேலைகளில் தங்கள் தாய் மொழியுடன் அலுவல் மொழிகளில் ஒன்றான இந்தியையும் படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழியை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் முன்னேற்றம் தாய்மொழி மற்றும் அலுவல் மொழியின் ஒருங்கிணைப்பில் அடங்கியுள்ளது,” என்று கூறியுள்ளார்.

இதில்தான் வில்லங்கம் உள்ளது. தாய்மொழியுடன் இணைப்பு மொழியாக இந்தி என்கிறார். இந்த முடிவை இந்திய ஒன்றிய அரசு எப்போது எடுத்தது. இந்திய ஒன்றிய அரசுக்கும்  மாநில அரசுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான்  இருந்து வருகிறது.  மோடி வந்த பிறகு இந்தியிலும் நடைபெறுகிறது. இதற்கு பலத்த எதிர்ப்பை தமிழ்நாடு தெரிவித்து வரும் நிலையில் இன்றைய இந்தி தின கொண்டாட்டங்களுக்கு பதிலடியாக டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது.

அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச்சமநிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்று கூறுவதில் ஏராளமான பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இது மறைமுகமாக இந்தியத் திணிக்கும் செயலாகும்!,” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Exit mobile version