ஆயிரக்கணக்கான போராளிகளை சிறைகளில் அடைத்துச் சித்திரவதை செய்யும் போது கே.பி சுதந்திரமாக உலாவருவதாக இலங்கை அரசு அறிவிக்க இன்டர்போல் நிறுவனம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.
கே.பி ஐ மலேசியாவில் கைதுசெய்து இலங்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக நடத்தப்பட்ட நாடகத்தின் பின்னணியில் உலகப் போலிசுக்கும் தொடர்பிருந்ததா என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன.
கே.பி ஐ துரோகி என என்றும் பிரித்தானியா போன்ற நாடுகளை தமது இரட்சகர்கள் என்றும் அன்னிய தேசியம் பேசும் புலிசார் புலம்பெயர் அமைப்புக்கள் கே..பி ஐ இன்டர்போல் கைதுசெய்யக் கோரி இதுவரை முறைப்பாடுகள் கூடச் செய்ததில்லை.