Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனிமேல் ராஜபக்சவை விடமாட்டேன் : வை.கோ ஆவேசம்

நேற்றிரவு, சென்னை திரும்பிய வைகோவும், அவரது கட்சியினரும் அண்ணாதுரை சமாதிக்குச் சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:இனப் படுகொலையை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, மூன்று முறை, பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவிற்கு வரவழைத்துள்ளார். இந்த நடவடிக்கை இனியும் தொடருமேயானால், ரயில், விமானம், பேருந்து என, லட்சம் பேர் திரண்டு சென்று, பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். ராஜபக்ஷேவுக்கும், இந்திய அரசுக்கும் உள்ள கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்துவேன் என்றார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, இந்தியாவிற்கு மீண்டும் அழைத்தால், லட்சம் பேர் திரண்டு சென்று, பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்,” என, வைகோ எச்சரிக்கை விடுத்தார்.
இந்திய அரசும் இலங்கை அர்சும் இணைந்து உலக ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன்நடந்த்த இனப்படுகொலையின் பின்னர் நில ஆக்கிரமிப்பும் இனச் சுத்திகரிப்பும் எந்த எதிர்ப்பும் இன்றிநடைபெறுகிறது.
இவையெல்லாம் ஒரு வகையான போராட்ட வியாபாரம் ஆகிவிட்டது. இனப்படுகொலை எப்படி நடத்துவது என்பது உலக நாடுகளுக்கு இலங்கை வெற்றிகரமான சோதனைக் களம். இப்போது எப்படி ஒரு தேசிய இனத்தின் அடிப்படைகளே அழிப்பது என்பது குறித்துச் பரிசோதனை நடைபெறுகிறது. ஒரு புறத்தில் வீர வசனங்கள் பேசப்பட மறுபுறத்தில் கைட்தட்டி ஆர்ப்பரிக்கிறோம்.

Exit mobile version