
தனது உரையில் மேலும் தெரிவித்த ரனில், மக்கள் புதிய அரசியல் கலாச்சாரத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.
ரனில் மற்றும் மைத்திரி கூறும் புதிய அரசியல் கலாச்சாரம் இனப்படுகொலையையும் கொலையாளியையும் புனிதப்படுத்தும் முயற்சியில் ஆரம்பித்துள்ளது. லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட மனிதப்படுகொலையைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்சவிற்கு ரனில் வழங்கும் மதிப்பு இன்னொரு இனப்படுகொலையையும் நடத்தத் தயார் என்ற செய்தியை மக்களுக்குச் சொல்கிறது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம்பிரித்தானியாவின் ஆளும் பிற்போக்கு அரச கன்சர்வேட்டிவ் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரித்தானியா சென்ற ரனில் அங்கு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனத் தெரியவருகிறது.
பிரித்தானியாவில் கன்சஎவேட்டிவ் கட்சியின் அதிகாரத் தரகரும் ரனிலின் நண்பருமான நிர்ஜ் தேவா ரனிலுடன் கலந்துகொண்ட உரையாடல்களின் ஆதாரங்கள் வெளியாகின.
நிர்ஜ் தேவா இயக்கும் அரசியல் கலாச்சாரம் யாழ்ப்பாணக் குடாநாட்டை நாசப்படுத்தி வருகிறது.
ரனிலின் நீண்டகால நண்பரான நிர்ஜ் தேவா இலங்கையின் பல வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலுள்ளார். குறிப்பாக சுன்னாகம் அனல் மின் நிலையத்தை நடத்தும் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் சுத்தமான நீரை நச்சாக்கிப் பேரழிவை ஏற்படுத்திவரும் இந்த நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளால் யாழ்ப்பாணம் நீர்வளமற்ற பிரதேசமாக மாறி வருகிறது.
ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் உறுப்பினரான நிர்ஜ் தேவா தனது பதவியைப் பயன்படுத்தி இலங்கையில் விதைத்துள்ள அரசியல் கலாசாரம் ஆபத்தானது.
வெலிவேரியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவிச் சிங்கள மக்கள் மீது துப்பாக்கிப்பிரையோகம் நடத்துவதன் பின்னணியில் செயற்பட்ட ஹேலிஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் நிர்ஜ் தேவாவும் ஒருவர்.
ஆக, புதிய அரசியல் கலாச்சாரம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலும் அதன் பயங்கரவாதத்தைக் நிறுவியுள்ளது.
