Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனச்சுத்திகரிப்பு : பௌத்த பூமிக்காக முஸ்லீம்களை வெளியேற்றும் இலங்கை அரசு

தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சகல வீடுகளினதும் கடைகளினதும் உரிமையாளர்கள் அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.
அப்பிரதேசத்தில் அமைந்துள்ள 52 வீடுகள், 12 கடைத் தொகுதிகள் என்பவற்றை நீக்குமாறு அதன் உரிமைகாளர்களிடம் நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறிப்பிட்ட காணித்துண்டுகள் புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 300/14 மற்றும் 1984.06.08 திகதி வர்த்தமானி அறிவித்தலின் படி அரசுடமையாக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்காக நீங்கள் வசிக்கும் இடம் அல்லது வீடு, புனிதபூமி அபிவிருத்தி திட்டத்துக்கு தேவைப்படுகிறது. அதற்குப் பதிலாக தம்புள்ளை கண்டலம் வீதி, கொள்வத்தை என்ற இடத்தில் காணித்துண்டு ஒன்றை அடுத்த இருவாரத்துக்குள் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கு தயராராகுமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவுறுத்தலை பெற்றுக் கொண்டோரில் சுமார் 65க்கும் மேற்பட்டோர் தம்புள்ளைவிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சென்று விபரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.
இதேநேரம், தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் இந்தச் செயற்றிட்டம் அமுல்படுத்தப்படும் போது பள்ளிவாசலுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவினர்.
இந்தத் திட்டத்துக்குள் பள்ளிவாசலின் ஒரு பகுதி உள்ளடக்கப்படுவதாகவும் பள்ளிவாசலின் மறுபுறத்திலிருந்து 60 அடி பாதை ஒன்று அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

Exit mobile version