Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்து மதவெறி பயங்கரவாதம் : ராஜ்தாக்கரே தொடர்கிறார்

பீகார் மாநிலத்தவர்கள் பற்றி ராஜ்தாக்கரே கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அசாம் கலவரத்தை கண்டித்து கடந்த மாதம் 11-ந்தேதி மும்பையில் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலம் சித்தர் மகியை சேர்ந்த அப்துல் காதர் முகம்மது யூனூஸ் என்பவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர். இதுதொடர்பாக பீகார் மாநில தலைமை செயலாளர் நவீன்குமார், மும்பை போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் கைது செய்த மும்பை போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே, மும்பை போலீஸ் மீது நடவடிக்கை எடுத்தால் மும்பையில் உள்ள பீகார் மாநிலத்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவோம். அவர்கள் இங்கு ஊடுருவியவர்கள் என்று கருத்து தெரிவித்தார். மிரட்டல் விடுக்கும் வகையில் அமைந்துள்ள ராஜ் தாக்கரேயின் பேச்சுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பெரும் பல்தேசிய நிறுவனங்களும் வியாபாரிகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனை தற்காலிகமாக மழுங்கடிக்கும் வகையில் உலகம் முழுவதும் திட்டமிட்டு முரண்பாடுகள் திசை திருப்பப்படுகின்றன. இன மத மோதல்கள் உருவாக்கப்படுகின்றன. மத வெறியர்கள் உருவாகிறார்கள், இனவெறியர்கள் மனிதக் கொலைகளை நடத்துகிறார்கள்.

இந்து மதவெறியும் பார்பன அதிகாரமும் இந்தியாவைச் சூறையாடுவதில் நீண்டகால வெற்றியக் கண்டுள்ளது.

Exit mobile version