Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்துக் கடவுள்கள் முனிவர்களை பிரதிநித்துவப்படுத்திய குடியரசு விழா!

இந்தியாவின் 73வது குடியரசு தின விழா டெல்லியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் பாதுகாப்பு படைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விமானப்படையின் 75 போர் விமானங்கள் முதல் முறையாக வானில் சாகசத்தில் ஈடுபட்டன. இந்த விழாவில் இந்தியாவின் 13 மாநிலங்கள் பங்கேற்றன. அவைகளில் பெரும்பாலானவை பாஜக ஆளும் மாநிலங்கள்.

எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்க  மாநில ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டன.

இந்த மாநிலங்களில் அணிவகுப்பு ஊர்திகள் பெரும்பாலும் இந்துக்கடவுள்கள், புரணங்கள், ஆகியவமை இடம் பெற்றன. ராமர், அனுமார், சீதை என இந்திய  வரலாற்றில் பிற்போக்குச் சக்திகளாக இருந்ததும். இந்தியப் பண்பாட்டு அளவுகோல்களாக அதையே  முன்னிறுத்தினார்கள்.

இதில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய சிலரது உருவங்களைத் தவிற வேறு எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை, மாபெரும் விடுதலைப் போராளி திப்பு சுல்தான், தெற்கில் போராடியவர்களுக்கான வாய்ப்புகளையும் மத்திய அரசு மறுத்து விட. இன்று தமிழ்நாட்டில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பாரதியார், வேலுநாச்சியார், வாஞ்சி நாதன்,  பெரியார், உள்ளிட்டோரின் சிலைகள் இடம் பெற்றும் பெரும் வரவேற்பையும் பெற்றது.

Exit mobile version