Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய ஹாக்கி அணி தலித் வீரரை அவமதித்த சாதி இந்துக்கள்!

இந்திய ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பின்னர் வெண்கலப்பதக்கம் வென்ற போதும்  ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வெல்லாமல் போக தலித் வீரரான வந்தனா கட்டாரியாவே காரணம் என்று கூறி அவரது குடும்பத்தினரை  இந்து சாதி வெறியர்கள் அவமானப்படுத்தியுள்ளனர்.41 ஆண்டுகளுக்குப்பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கின் காலிறுதிக்குள் நுழைவதற்கு வந்தனா கட்டாரியா முக்கியக் காரணம் என்ற போதும் அவருக்கு இந்த அவமானம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்திய ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பாலுக்கு அடுத்தபடியாக அணியில் உள்ள சீனியர் வீரர் வந்தனாதான். அவர் 15 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணிக்கு விளையாடி 245 போட்டிகளில் 67 ஹோல்கள் அடித்துள்ளார். 29 வயதான வந்தனாவின் ஹோல்கள்தான் இந்தியாவை 41 ஆண்டுகளுக்குப் பின்னர் அரையிறுதி போட்டிகளுக்கே அழைத்துச் சென்றது என்ற போதும் அவரது  சொந்த ஊரில் அவரது குடும்பம் இந்துத்துவ சாதி வெறிக் கும்பல்களால் அவமானப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 30-ஆம் தேதி வந்தனாவின் தந்தை மாரடைப்பால் இறந்து விடுகிறார். தந்தையின் உடலைக் கூட வந்தனா பார்க்கவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் திவீரமாக ஈடுபடுகிறார்.

அரையிறுதி வரை அணி சென்று அர்ஜெண்டினாவிடம் தோற்று நாடு திரும்பியது ஹாக்கி அணி. தங்கம் வெல்லா விட்டாலும் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் அரையிறுதி வரை அணி சென்றதை பெருமையாக நாடேநினைக்கும் நிலையில் ஹரித்வார் அருகில் உள்ள ரோஷ்னாபாத் கிராமத்தில் உள்ள வந்தனா கட்டாரியா குடும்பத்தினருக்கு அந்த ஊரின் சாதி இந்துக்கள் எதிர்ப்பு  தெரிவித்துள்ளார்கள்.

தலித்துக்களை ஹாக்கி அணியில் சேர்ததால்தான் அணி தோற்றதாகக் கூறி தோல்வியைக் கொண்டாடும் வகையில் வெடி வெடித்து கொண்டாடியுள்ளார்கள்.

இந்தியாவில் தலித் ஒருவர் ஜனாதிபதி கூட ஆகிவிட முடியும். ஆனால் உள்ளூர் கிராமப்புற அளவில் அவர்கள் எதிர்கொள்ளும் சாதி வெறிக் கொடூரங்கள் இன்றளவும் குறையவே இல்லை. இந்திய அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்ற வந்தனா கட்டாரியாவுக்கே இதுதான் நிலை என்றால் ஏழை தலித்துக்களின் நிலையை என்னவென்பது?

Exit mobile version