Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் துவங்கி எழுதப்படும்- முதல்வர் ஸ்டாலின் !

தமிழர்களின் பண்பாட்டு வேர்களைத் தேடி உலகமெங்கும் பயணம் செய்ப்வோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.  கீழடி ஆய்வுகள் உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. மத்திய அரசு கீழடி ஆய்வுகளை கைவிட்டது.  சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறையை கீழடியில் நாம் காண முடியும். நான்காம் நூற்றாண்டைச்  சேர்ந்த வெள்ளிக்காசுகள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 15 கோடி செலவில் பொருநை தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

கொற்கை துறைமுகம் கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.பொருநை ஆற்று நாகரீகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தமிழர்களின் பெருமைகளைத் தேடி உலகெங்கும் பயணிப்போம். கேரளாவின் பட்டணம், ஆந்திராவின் வேங்கி,ஓரிசாவின் பாலூர். கர்நாடகாவின் தலைக்காடு உட்பட  

இந்தோனேனிட்யும், தாய்லாந்து, மலேஷியா எகிப்து,இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற  இலங்கை

 வெளிநாடுகளிலும் தமிழர்களின் வேர்களைத் தேடும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபடுவோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து துவங்கித்தான் எழுதப்பட வேண்டும்”என்று பேசினார்.

Exit mobile version