டெல்லியில் இன்று நடைபெறவிருந்த இந்திய உளவுப்படையினதும் அதன் துணைக் குழுக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்க் கட்சிகளின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்ஷனம் நாச்சியப்பன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். ஈ.என்.டி.எல்.எப் என்ற இந்திய அமைதிப்படையின் துணை இராணுவக் குழு இவருடன் இணைந்து கூட்டதை ஒழுங்கு செய்ததிருந்தது. ஐரோப்பாவில் சில வாரங்களுக்கு முன்னர் பயணம் செய்த நாச்சியப்பன் மாநாட்டிற்கான அழைப்பை விடுத்திருந்தார். நாடுகளதும் உளவுப்படைகளதும் அடியாட்களாகச் செயற்படும் புலம்பெயர் அமைப்புக்கள் பல மாநாட்டில் கலந்துகொள்வதற்குத் தயாராகியிருந்தன.