Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா விற்பனைக்கு பட்ஜெட் பார்வை!

நேற்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டிற்குப் பின்னர் பெட்ரோர் விலை 60% உயர்ந்து 101 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா ஊரடங்கால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த பட்ஜெட் பேரிடியாக மக்கள் மீது இறங்கியிருக்கிறது.

பெட்ரோல் விலை உயர்வு அனைத்து பொருட்களில் விலைகளையும்  50% அளவுக்கு உயர்த்தும் என்பதோடு  சுங்கக்கட்டணம் உள்ளிட்டவைகளும் உயர இருப்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக  உயரக்கூடும் என்கிறது தகவல்கள்.

இந்திய அரசு பற்றாக்குறை பட்ஜெட்டை அறிவித்துள்ளது. 2021 -22 நிதியாண்டில் செலவழிக்க இருக்கும் தொகை 36.8 லட்சம் கோடி ரூபாய். அதில் 15.06 லட்சம் கோடி ரூபாயை கடன் மூலம் திரட்ட இருக்கிறது. கடன் யாரிடம் வாங்குவது எப்படி வாங்குவது என்றால் அதற்குத்தான் இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி அதன் மூலம் பற்றாக்குறையை சரிக்கட்ட நினைக்கிறது.

உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில்தான் குறைவு என்பதையும் நிர்மலா சீத்தாராமன் சுட்டிக்காட்டியிருக்கிறார் அதுவும் உண்மைதான். வரி குறைவு என்பதோடு சலுகைகளும் கார்ப்பரேட்டுகளுக்கு அதிகம்.  இந்தியாவில் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ,சி தனியார் மயமாகிறது அதே போன்று ஐ.டி.பி.ஐ நிறுவனமும் தனியார் மயமாகிறது. ஐ.டி.பி.ஐ தனியார் மயம் ஆக்கப்பட்ட பின்னர் பல தேசிய வங்கிகள் தனியார் மயமாக்கப்பட இருக்கிறது. வங்கிகள் திவாலானார் வைப்புத் தொகையில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று பீதியை உருவாக்குகிறார்கள்.

2021-2022 பட்ஜெட் முற்றிலும் தனியார் மயத்தை சுமந்திருக்கிறது. மோடி அரசு உதய் மின் திட்டம் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் சமீபத்தில் தமிழகம் இணைந்தது. இது அரசு மின்வாரியத்தை குழி தோண்டி புதைத்து விட்டு தனியார்களை கொண்டு வரும் திட்டம் ஆகும் அதைத்தான் “மக்கள் விரும்புவோரிடம் மின்சாரம்” வாங்கலாம் என்ற பெயரில் கொண்டு வருகிறார்கள்.

விவசாயிகள் விரும்புவோரிடம் விளைபொருட்களை விற்பனை செய்யலாம் என்ற பெயரில் ரிலையன்ஸ் அம்பானிக்கு விவசாயம் வழங்கப்பட்டது போல மின்சாரம் அதானிக்கு விடப்படுகிறது. இப்போதே  அரசு அதானியிடம் மின்சாரம் வாங்கி மக்களுக்கு  விற்பனை செய்து வருகிறது.

இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை நாம் இப்படி புரிந்து கொள்ளலாம்.

பெட்ரோல் டீடல் விலை உயர்வு

எல்.ஐ.சி , பாரத்பெட்ரோலியம், ஏர் இந்தியா, துறைமுகங்கள், வங்கிகள், கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப்ஃ இந்தியா போன்றவை தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது.

அதே  நேரம் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை,  வெளிநாள் வாழ் இந்தியர்களுக்கு  வரிச்சலுகை என இந்திய சமூகத்தில் உள்ள 20% மேல் தட்டினருக்கான அரசாக முழுமையாக மாறியுள்ளது மோடி அரசு.

Exit mobile version