Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா இந்துத்துவவாதிகளுக்கான நாடு அல்ல-ராகுல்காந்தி!

உத்தரபிரதேசம்,கோவா, பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் வட மாநிலங்களில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. நேற்று பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ராகுல்காந்தி பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தியின் உரை பரவலாக கவனிக்கப்பட்டுள்ளது.  “இந்து, இந்துத்துவ வாதி என்ற இரு சொற்களும் வெவ்வேறான பொருள் கொண்டவை. தான் ஒரு இந்து என்றும் ஆனால் இந்துத்துவவாதி இல்லை.ஆனால் மகாத்மா காந்தி இந்து அவரைக் கொன்ற கோட்சே இந்துத்துவவாதி எப்போதும் அதிகாரத்தில் நீடித்திருக்க வேண்டும் என்ற தேடலில்தான் ஒரு இந்துத்துவவாதி தன் முழு வாழ்நாளையும் செலவிடுகிறான். அதிகாரத்தைத் தவிற வேறு எதிலும் அவர்களுக்கு பற்று இல்லை.”என்றார்.

மேலும், “இந்தியா இந்துக்களின் நாடு, ஆனால், இந்துத்வவாதிகளுக்கான நாடு அல்ல. அதிகாரத்தை மட்டுமே விரும்பும் இந்துத்வவாதிகளை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, இந்துக்களை மக்கள் அமர வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். யாரையும் அச்சுறுத்தாமல், அனைத்து மதத்தினருக்கும் உரிய மரியாதை தருபவரே உண்மையான இந்து என்றும் ராகுல் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் நெஞ்சில் குத்தாமல் முதுகில் குத்தியிருக்கிறார். அதற்கு காரணம் அவர் ஒரு இந்துத்வவாதி. கடந்த 7 ஆண்டுகளாக நான்கு தொழிலதிபர்களுடன் கைகோர்த்து பிரதமர் மோடி இந்த தேசத்தை பாழாக்கிவிட்டார் என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

Exit mobile version