உலக அளவில் பாசிஸ்டுகளின் பிரச்சாரங்களும் கோரிக்கைகளும் வேடிக்கையாகவோ காமெடியாகவோதான் இருக்கும். ஆனால். இப்படி காமெடி போன்று பேசத்துவங்கி அவர்கள் செயல் திட்டங்களை சாத்தியமாக்கி விடுகிறார்கள்.
பாபர் மசூதி இடிப்பு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்கள் அனைத்துமே காமெடியாக துவங்கியதுதான். ஆனால், அவைகளை செய்து முடித்து இந்தியாவை இந்து நாடாகவே மாற்றி விட்டார்கள். பெயரளவுக்குத்தான் இந்தியா மதச்சார்பற்ற நாடாக உள்ளது. ஆப்கானில் எப்படி தலிபான்கள் ஷரியத் சட்டத்தின் படி ஆட்சி செய்கிறார்களோ அப்படியே இந்தியாவில் இந்து வர்ணாஸ்ரம சட்டத்தின் படியே ஆட்சி செய்கிறார்கள் இந்நிலையில்தான் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்ற புகழ் பெற்ற சாமியார் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அயோத்தியில் உள்ள தபஸ்வீ மடத்தின் சாமியாராக இருப்பவர் ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா மகாராஜ் இவர் அயோத்தியில் ராமர்கோவில் கட்ட சாகும் வரை உண்ணா விரதம் இருந்து சாகாமலேயே புகழ் பெற்றவர். இவர் திடீரென அயோத்தியின் ராம் ஜானகி கோவிலின் முன்னாள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் அவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்ததையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
பின்னர் பேசிய சாமியார்,
“அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்கா விட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்துக்களின் அரசு. அவர்கள் முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்களின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
சிறுபான்மை மக்களை நாடற்றவர்கள் ஆக்க வேண்டும் என்றுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.