தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் இறுதியில் தென் பட்ட ஓமைக்ரான் வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஓமைக்ரான் வைரஸ் அபாயக்கட்டத்தை அடைந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் கடுமையான விதிமுறைகள் ஓமைக்ரான் பரவலுக்கு எதிராக கொண்டு வரப்பட இருக்கிறது.
இந்தியாவில் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மராட்டியம், டெல்லி, கேரளா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம், அரியானா, உத்தரகாண்ட், சண்டிகார், காஷ்மீர், உத்தரபிரதேசம், கோவா, இமாசலபிரதேசம், லடாக், மணிப்பூர் என தனது பயணத்தை தொடர்கிறது.
இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை தற்போது 781 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக டெல்லியில் 238 பேருக்கும், மராட்டிய மாநிலத்தில் 167 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் ஓமைக்ரான் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 34 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ள நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா தோற்றும் சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது
இந்நிலையில் சென்னையில் ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் அசோக் நகர் 19வது தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரானா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது அடுத்தடுத்து மேலும் சிலருக்கு தொற்று உறுதியானது.
ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.