இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இன்ரு 10,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தடுப்பூசி காரணமாக பெரிதாக பரவவில்லை. தீபாவளி பண்டிகையின் பின்னரும் பெரிய அளவு இந்த பாதிப்புகள் அதிகரிக்காத நிலையில் நேற்று 8,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் கேராள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 5,516 பேர். கேரள மாநிலத்தில் இருந்து அயலக நாடுகளில் பணியாற்றுகிறவர்கள் அதிகம் என்பதால் வெளிநாட்டுகளில் இருந்து வருவோர் மூலம் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இந்நிலையில், சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பின் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பத்தாயிரத்து 197 பேருக்கு புதிய தொற்று உறுதியானது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 301 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,64,153 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.35 % ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,134 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,73,890 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.28 % ஆக உள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 12,42,177 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 62,70,16,336 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.