Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கவலைக்கிடம்!

இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்களில் முக்கியமானவராக ஒன்றிய அரசின் மோடி மாறியிருப்பதாகவும்

Reporters Without Borders (RSF) எல்லைகளில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு அற்க்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஊடக சுதந்திரத்தை நசுக்கும் தலைவர்கள் தொடர்பான விபரங்களை gallery of grim portraits என்ற தலைப்பில் எல்லைகளில்லா ஊடக அமைப்பு வெளியிட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் இப்போது உலகம் முழுக்க 17 தலைவர்கள் இடம் பெற்றுள்ளார்கள். ஊடக தணிக்கை, கடுமையான சட்டங்களினூடாக இந்த ஒடுக்குமுறை இறுக்கமடைந்து வருவதாக கூறுகிறார்கள்.பத்திரிகையாளர்கள் இயங்குவதற்கு மோசமான நாடுகள் என்றும் பல நாடுகள் மிக மோசமானவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 13 நாடுகள் ஆசியா – பசிஃபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவை.

சௌதியின் பட்டத்து  இளவரசர் முகமது பின் சல்மான் ஜமால் கஷோக்கி கொலைக்குப் பின்னர் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.பிரேசிலின் அதிபர் சயீர் பொல்சனாரூ, ஹங்கேரியின் விக்டர் ஆர்பன் ஆகியோரும் இந்தப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். விக்டர் ஆர்பனைப் பொறுத்தவரை 2010லிருந்தே ஊடக சுதந்திரத்தையும் பன்முகத் தன்மையையும் கடுமையாக கட்டுப்படுத்தி வருகிறார். மிகக்குறிப்பாக இந்திய பிரதமர் மோடி இதில் இடம் பெற்றுள்ளார்.

2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த மோடி ஊடகங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை அந்த மாநிலத்தில்  சோதனை செய்து பார்த்து விட்டு அதை இந்தியா முழுமைக்கும் விரிவு படுத்தியிருக்கிறார்.

ஊடக  அதிபர்களோடு நெருக்கம் காட்டுவதன் மூலம் அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் அச்சத்தை உருவாக்குவது. தம்மைப் பற்றி  எழுதும் ஒரு அச்சத்தை விதைப்பது. பொதுவெளியில் அரசை விமர்சித்து எழுதுவோரை அவமானகரமான முறையில் பேசுவது, பெண்கள் என்றால் விபச்சாரிகள் என்று வசவுவது. உச்சமாக ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் மோசமான சட்டங்களில் கைது செய்வது. எனச் செல்கிறது.

மிக முக்கியமான இந்த அறிக்கை கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளை சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிக்கையில் இந்தியாவில் ஊடகச் சுதந்திரத்தின் நிலை சிகப்பு குறியீட்டின் கீழ் அடையாள மிடப்பட்டுள்ளது. அதாவது ஊடகச் சுதந்திரத்தின் ஆபத்தான நிலையை இது எடுத்துக் காட்டுகிறது.

Exit mobile version