கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பற் படையினர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கப்பற்படையினரை தங்கள் வசம் ஒப்படைக்கக் கோரி வந்த இத்தாலி அரசு, இதுவரை இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு சாதகமான பதில் வரவில்லை. எனவே, இந்தியாவுக்கான இத்தாலி தூதரை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது.
மிஸ்துராதான் மூன்று முறை இந்தியாவுக்கு வந்து இந்த விவகாரத்தைக் கையாண்டவர். இவரது பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குடன் அந்நாட்டு பிரதமர் மரியோ மோன்டி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.