Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவின் முதல் திருநங்கை புகைப்பட ஊடகவியலளர்!

மும்பையில் மெட்ரோ ரெயிலில் யாசகம் செய்தே தன் வாழ்வை கழித்து வந்தார் ஸோயோ. கழிந்த லாக்டவுன் காலத்தில் ரெயில்கள் ஓடாததால் தனது வாழ்க்கையை கழித்திட பெரும்பாடாகிவிட்டது, வறுமை வாட்டி எடுத்தது என்கிறார்.
இந்த நேரத்தில் ஸோயோ வை பிரபலமான டைரக்டர் ஒருவர் தனது குறும்படத்தில் நடிப்பதற்காக அழைத்தார். அந்தபடம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. அந்த படத்தில் நான் நடிக்க ஒத்துக்கொண்டதற்கான காரணம், படத்தில் கேரக்டரே எனது வாழ்க்கையாகவும் இருத்ததே. எனக்கு சிறுவயதில் ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு படிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போனது.நான் நன்றாக படித்து அரசின் உயர் அதிகாரியாக வேலைபார்க்க விரும்பினேன்.


ஆனால் குடும்ப சூழல் என்னை படிக்க அனுமதிக்கவில்லை.
நான் நடித்த குறும்படத்தின் வெற்றி விழவிற்கு வந்திருந்த பிரபலமான ஊடக அதிபர் என்னிடம், தனது ஊடகத்தில் ரிப்போர்ட்டர் வேலைக்கு அழைப்பு விடுத்தார். மிகுந்த உற்சாகத்தோடு வேலைக்கு சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தேன்.
எனக்கான சொந்தமான கேமிரா இல்லாதது மட்டுமே பெரும் குறையாக இருந்தது. சொந்தமாக கேமிரா வாங்குவதற்காக மீண்டும் ரெயிலில் யாசகம் செய்து பணம் சம்பாதித்து எனக்கான கேமிராவினை வாங்கினேன்.
புகைப்படம் எடுக்கிற நுட்பங்களை பிரபல புகைப்பட கலைஞர் ‘திவ்வியாங்கா சோலாங்கி’ எனக்கு கற்று தந்தார்.
நான் வசிக்கிற மும்பை ‘பந்திரா’வில் வாழ்கிற புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றிய ஆவணப் புகைப்படத்தினை பதிவுகள் செய்தேன். இந்த படங்களே இப்போது மற்றவர்கள் என்மீது கவனம் கொள்ள செய்துள்ளது.


கேமிரா என் வாழ்க்கையினை மாற்றியுள்ளது. காட்சிகளின் மூலம் மற்றவர்களின் துயரங்களையும், அவர்களின் வாழ்க்கை சிக்கல்களை வெளிக்கொண்டு வருவதில் ஒருவித நிம்மதியும் வாழ்வதின் அர்த்தத்தையும் இப்போது எனக்கு உணர்த்தியுள்ளது என்கிறபோது,
‘ஸோயோ தாமஸ் லோபோ’ என்கிற திருநங்கை நம் மனதில் ஏதோ ஒரு உத்வேகத்தை விதைக்கிறார்.

பதிவு-ஜவஹர் ஜி -புகைப்படக் கலைஞர்

Exit mobile version