இந்த நிலையில் இந்தியா சென்ற அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அப்போட் இந்தியாவிற்கு அணுவாயுதம் தயாரிக்கும் யூரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்ததில் கைச்சாத்திட்டார்.
இந்தியா அணுவாயுதத் தடை ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ளாத நாடு என்பதால் அவுஸ்திரேலியா இந்தியாவிற்கான யூரேனிய ஏற்றுமதிக்கு இதுவரை காலமும் தடை விதித்திருந்தது.
அணுவாயுதத் தடை ஒப்பந்ததில் கைச்சாதிடாத நாடு இந்தியா என்றாலும் அதற்கு யூரேனியம் விற்பனை செய்யலாம் என்று தனது காரணங்களை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்வைத்தார். இதுவரை இந்தியா போர் அச்சுறுத்தல்களில் ஈடுபடவில்லை என்ற பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டார்.
இந்தியா என்ற நாடு பாகிஸ்தானுடன் மூன்று கோரமான போர்களிலும் சீனாவுடன் ஒரு போரிலும் ஈடுபட்டிருக்கிறது, தெற்காசியாவில் தனது அண்டை நாடுகளை அச்சுறுத்தும் பிராந்தியத்தின் பேட்டை ரவுடி போன்று செயற்படும் இந்தியா பல்வேறு இனக்கொலைகளைத் தலைமை தாங்கியிருக்கிறது.
இப்போது ஜப்பான், அவுஸ்திரேலியா இந்தியா ஆகிய நாடுகள் முத்தரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சியை நடத்துவதாக அறிவித்துள்ளன.
இலங்கை இந்தியா ஜப்பான் அவுஸ்திரேலியா இணைந்த கடற்பாதுகாப்பு வலையம் ஒன்றை உருவாக்குவதன் ஊடாக ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து சீனாவிற்கான கடல்வழிப் பயணங்களை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதன் ஒரு பகுதியாகவே இப் புதிய கூட்டுக் கருதப்படுகின்றது.
அமெரிக்காவின் ஆசியா பசிபிக் கட்டளையகத்தின் ஒரு பகுதி இலங்கையில் நிலை கொண்டிருப்பதும், இப் புதிய கூட்டணியும் சீனாவின் பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிராகவும் ரஷ்யாவின் இராணுவ ஆதிக்கத்திற்கு எதிராகவும் அமெரிக்காவின் தந்திரோபாயம்.
உலகம் முழுவதையும் போர்க்களமாக்கியிருக்கும் அமெரிக்கப் பயங்கரவாதம் மோடியை ஆட்சியில் அமர்த்துவதற்கு பின்புலத்தில் செயற்பட்டதன் பலனை இப்போது அறுவடை செய்கிறது.
அமெரிக்க அணியின் அடிமைகளான அவுஸ்திரேலியாவும், ஜப்பானும் இந்திய நோயாளி அரசை அரசை இணைத்துக்கொண்டு இந்து சமுத்திரத்தை இராணுவ மயமாக்க்கி வருகின்றன. இக்கூட்டின் அமெரிக்க இராணுவத் தளமாக இலங்ககை செயற்படும்.