Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தித் திணிப்பு வேண்டாம் : இரைஞ்சும் கருணாநிதி

karunanithiஇது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை – சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன் முறையாக முடிவெடுத்துள்ளது.
வெளிநாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதற்கு இந்தி மொழியையே பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவரது விருப்புரிமையையொட்டி, அரசு அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு இந்தி மொழியையே பயன்படுத்திட வேண்டும்.
27.05.2014 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்துள்ளது.
அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் “ட்விட்டர்”, ”பேஸ்புக்” போன்ற தங்களுடைய சமூக வலைத்தளங்களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டு, அது நடை முறைப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, “டிவிட்டரில்” இந்தி மொழியைத்தான் பயன்படுத்துகிறார் என்று ஆங்கில நாளேட்டின் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.
1938 ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போதும், 1965-ம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சியையும், கிளர்ச்சியையும் சரித்திரம் விரிவாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது.
இந்தி மொழித் திணிப்பு, இசுலாமிய எதிர்ர்பு ஆகியவற்றால் இந்தியாவெங்கும் தீ மூட்டிவிட்டு அதன் வெம்மையில் மக்கள் அறியாமலேயே பல்தேசிய வர்த்தக நிறுவனங்களைக் கொள்ளையிட அனுமதிப்பதே நரேந்திர மோடியினதும், அவரை பிரதமராக்கிய கொள்ளையர்களதும் நோக்கம். இந்தித் திணிப்பிற்கும், பல்தேசியக் கொள்ளைக்கும் தமிழ் நாட்டில் முகவராகச் செயற்பட்ட வை.கோ எங்கே? மோடியின் நட்பிற்காக ஏங்கும் ஜெயலலிதவை ஆட்சியேற்ற உழைத்த சீமான் எங்கே? ஈழத் தமிழர்களைக் 80 களில் ‘காப்பாற்றியது போல’ காப்பாற்றுங்கள் என கண்ணீர்வடிக்கும் தமிழ்த் தேசிய வியாபாரிகச்ள் எங்கே?

Exit mobile version