செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் சி.பி.ஐ. பதிலளிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்ட்ள்ளார்.
ஸ்பெcட்ரம் ஊழல் தொடர்பாக ஆ.ராசா 2011 பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு 15 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு மே மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை ஒரு தலைபட்சமாக வரையப்பட்டுள்ளது என்றும் 2003 முதல் 2007 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த ஒதுக்கீடுகள் பற்றி குற்றப்பத்திரிக்கை மௌனம் சாதித்துள்ளது என்று ஆ.ராசா தரப்பில் கூறப்பட்டது.
ஆ.ராசாவின் ஊழல் வழக்கில் வேறுபட்ட காலப்பகுதியில் வேறு நபர்களும் தொடர்புபட்டிருக்கலாம் என்பதை அடிப்படையாக முன்வைத்து அவர் சி.பிஐ இற்கு நோட்டீஸ் அனுப்பக் கோரியிருந்தார்.
2003ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட உரிமங்கள், அதாவது 51 உரிமங்கள் 2008ஆம் ஆண்டு முதல் ஒதுக்கப்பட்ட அதே விதிமுறைகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனாலும் குற்றப்பத்திரிக்கை இது பற்றி மவுனம் சாதித்து வருகிறது. சிறப்பு நீதிபதியும் இந்த விவரத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை இது மிகப்பெரிய தவறு என்று ராசா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.