Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆலந்தூர் கமல் கோவைக்கு ஓட்டம்!

ஆலந்தூரில் போட்டியிடுவதாகச் சொன்ன கமல் திமுக அதிமுக இல்லாத கோவை தெற்கு தொகுதியை கண்டு பிடித்து அங்கு போட்டியிடுகிறார். மய்யம் கட்சியின் தலைவர் கமல் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற தேர்தல் இது.

234 தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளில் போட்டியிடும்  மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க திணறி வருகிறது. இதனால் சிறு சிறு கட்சிகளுக்குக் கூட ஏராளமான தொகுதிகளை அள்ளிக் கொடுக்கிறது. எஸ்.டி.பி.ஐ என்ற முஸ்லீம் கட்சிக்கு 25 தொகுதிகள் வரை தருகிறோம் என்று அழைத்த போதும் அக்கட்சி கமல் கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை. அக்கட்சி தினகரனோடு சேர்ந்து வெறும் ஆறே தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதே போன்று பிரபல யூடியூபர்ஸை வளைத்துப் பிடிக்க கமல் தனி டீமே போட்டிருக்கிறார். தமிழகத்தின் பிரபல யூ டியூபரான மதன் கௌரியை மக்கள் நீதிமய்யம் சார்பில் களமிரக்க பேசப்பட்டதாக செய்திகள் வெளியானது. சமையல் , பக்தி தொடர்பான விடியோக்களை வெளியிட்டு வந்த மகாலட்சுமி என்ற பெண் திடீர் சுற்றுச் சூழல் போராளி ஆனால். அவரையும் மதுரவாயல் தொகுதியில் களமிரக்கியுள்ளது மய்யம் கட்சி. கமலோ தான் ஆலந்தூரில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஆலந்தூர் தொகுதியில் கணிசமான பிரமாணர் வாக்குகள் உள்ளது அந்த வாக்குகளை குறிவைத்தே கமல் போட்டியிடுவதாக செய்திகள் வெளியான நிலையில், இப்போது கோவை தெற்கு தொகுதிக்கு இடம் மாறியிருக்கிறார் கமல்.

சீமான் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாகச் சொல்லி விட்டு பின்னர் திருவொற்றியூருக்கு எப்படி இடம் மாறினாரோ அப்படியே சீமானும் ஆலந்தூரை விட்டு விட்டு திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளும் போட்டியிடாத கோவை தெற்கு தொகுதிக்கு இடம் மாறியிருக்கிறார்.

கமல் போட்டியிடுவதாகச் சொன்ன ஆலந்தூரில் திமுக சிட்டிங் எம்.எல்.ஏ தா.மோ.அன்பரசன் அவர்களும், அதிமுக பா.வளர்மதியும் போட்டியிடுகிறார்கள். அவர்கள் இருவருமே பெரும் செல்வாக்கு மிக்கவர்கள்.

கோவை தெற்கில் வானதியும், கங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடுகிறார்கள். அங்கு வெற்றி பெறலாம் என நினைக்கும் கமல் அங்கு போட்டியிடுகிறார். கோவையில் ஊழல் அதிகம் அதனால் கோவையில் போட்டியிருகிறேன் என்கிறார்.எஸ்.பி வேலுமணியின் உள்ளடி வேலைகளால் தான் கோவை தெற்கு அர்ச்சுனனிடம் இருந்து பிடுங்கப்பட்டு பாஜக வானதிக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய ஊழல் நடவடிக்கை இது ஆக, ஊழலை எதிர்க்கிறேன் என்று சொல்லும் கமல் எஸ்.பி வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூரிலாவது போட்டியிட வேண்டும்.கமல் ஒரு கட்சியின் தலைவர் அவரே தோல்விக்கு பயந்து ஓடினால் வேட்பாளர்களாக களமிரங்கும் யூடியூபர்ஸ் என்ன செய்வார்கள்

Exit mobile version