ஆம் ஆத்மி தொண்டகள் பா.ஜ.கவினரால் தாக்கப்படுவதன் மூலம் தொடர் ஆம் ஆத்மிக்கு தொடர் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்” என்று ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
வாரணாசியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் நேற்று இரவு கெஜ்ரிவாலை ஆதரித்து அசி கேட் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பா.ஜனதா கட்சியின் பேட்ஜ் அணிந்து வந்த சிலர், ஆம் ஆத்மி கட்சியின் நந்தன் மிஸ்ரா, அங்கித் லால் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், பா.ஜனதா கட்சியினர் தங்களை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் புகார் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் அடையாளம் தெரியாத அந்த நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான ஜனநாயக முற்போக்கு சக்திகளை தவறானவர்களை நோக்கி உள்வாங்குவதற்காக ஏகாதிபத்திய சார்புக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட. அவர்களின் தொடர்ச்சியன நிதி வழங்கலுக்கு தேர்தல் வெற்றியை விட தேர்தல் புறக்கணிப்பு நடக்காமல் கண்காணிப்பதே அவசியமானது.
இத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “வாரணாசியில் அச்சுறுத்தும் சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. வன்முறையில் ஈடுபட்டது பா.ஜனதா குண்டர்கள்தான். எங்களை அவர்கள் பயமுறுத்த முடியும் என்று நினைத்தால் அது தவறு. காஷியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆட்டோக்களில் ஒட்டியிருந்த பிரச்சார போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், பா.ஜனதாவுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.