Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆம் ஆத்மி இலிருந்து எழுத்தாளர் ஞானி வெளியேறினார்:சோதனை மேல் சோதனை

gnaniஆம் ஆத்மி கட்சியின் உடல் நிலையும், தனது உடல்நிலையும் சரியில்லாததால் பதவி விலகுகிறேன் என்று எழுத்தாளர் ஞானி அறிவித்துள்ளார். நடந்து முடிந்த ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் பிரபல எழுத்தாளர் ஞானி போட்டியிட்டார். 5729 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்து டெபாசிட் இழந்தார். இந்நிலையில் ஆம் ஆத்மியில் இருந்து இன்று திடீரெனெ விலகியுள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் தெற்காசியாவை நோக்கிக் கழுகள் போல வட்டமிடுகின்றன. நரேந்திர மோடி போன்ற அடியாட்ளை தனது நேரடித் தலையீட்டிற்காக உருவாக்கினாலும் அவர்களுக்கு எதிரான எதிப்பையும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ஊடாக தமது கட்டுப்பாட்டினுள்ளேயே வைத்துள்ளன. அவ்வாறான அன்னிய நிதி வளத்தில் இயங்கும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளில் ஞானி போன்ற பலர் இணைந்து தமது மத்தியதரவர்க்கக் குற்ற உணர்விற்கு வடிகாலாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
இது தொடர்பாக தனது வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஞானி, கட்சியின் உடல் நிலையும், எனது உடல்நிலையும், சரியில்லை. என்னால் தொடர்ந்து கட்சியில் செயல்பட முடியாத காரணத்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன். கட்சியில் இருந்து விலகினாலும், நான் கட்சியில் சேரும் முன்னரே ஆம் ஆத்மியை பற்றி ஆதரித்து பேசியும், எழுதியும் வந்தேன். இனியும் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version