ஆப்கானிஸ்தானில் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா பிரிவினர் வழிபடும் இமான் பர்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த வாரம் இதே போன்று குண்டூஸ் பகுதியில் ஷியா மசூதியில் நடந்த தற்கொலை தாக்குதலில் 50 பேர் வரை கொல்லப்பட்டனர்.
ஒரு வாரத்தின் பின்னர் வெள்ளிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஐ.எஸ்.கே என்ற திவீரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் அவர்கள் நடத்திய தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.