Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆப்கானில் தலிபான்கள் விரைவில் அரசு அமைப்பு!

ஆப்கானிஸ்தானில்  இருந்து அமெரிக்கா உட்பட நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில், ஓரிரு நாட்களில் தலிபான்கள்  பதவியேற்றுக் கொள்வார்கள் என தெரிகிறது.

இப்போது அமெரிக்க படைகள், ஆப்கான் படையினர் விட்டுச் சென்ற ஆயுதங்கள் பொருட்களை எடுத்து சீரமைத்து அதை தாங்கள் பயன்படுத்தத் துவங்கி உள்ளனர். இதுவரை இஸ்லாமிய உடைகளில் தெரிந்த தலிபான்கள் இப்போது முழு ராணுவ சீருடைகளுக்கு மாறி உள்ளார்கள். அமெரிக்க ராணுவ வீரர்கள் விட்டுச் சென்ற ராணுவ உடைகளையும் ராணுவ வாகனங்களையும்  எடுத்துக் கொண்ட ஆப்கான் தலிபான்கள். நேற்று ஆயுத அணிவகுப்பு ஒன்றை நடத்தினார்கள்.

அதில் தங்களிடம் உள்ள நவீன ஆயுதங்கள், ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டு காட்சிப்படுத்தினார்கள். இன்னும் சில நாட்களில் அவர்கள் பதவியேற்றுக் கொள்ள இருக்கும் நிலையில் முல்லா ஹைபத்துல்லா அஹூன்ஸாடா புதிய அரசின் தலைவராக இருப்பார் என்று தெரிகிறது. மேலுன் சிராஜூதீன் ஹக்கான்க்கும், முல்லா முகம்மது உமரின் மகன் மவுலவி முகம்மதுவுக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படும், முல்லா அப்துல் கனி பரதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.காரணம் இவர் அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் கத்தாரில் பேச்சுவார்த்தையை நடத்தினார்.

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் எமிரேட்ஸ் என்று அழைக்கப்பட இருக்கும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு இப்போது சர்வதேச அளவில் நெருக்கடி எதுவும் இல்லை என்றே தெரிகிறது.

Exit mobile version