தமிழகத்தின் புகழ்பெற்ற சாமியார் நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஆதாரம் ஒன்று வெளியானதைத் தொடர்ந்து சாமியார் தலைமறைவாகி விட்டார். அவரது ஆஸ்ரமங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. சாமியாரை நம்பி எந்த பகதரும் ஏமாந்த மாதிரியோ அவரால் ஏராளமான பெண்கள் பாலியல் தொலைக்களுக்குள்ளான மாதிரியோ எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. இவ்வாரான குற்றச்சாட்டுகள் இல்லை என்பதாலேயே இந்த காவியுடை பேரவழிகள் உத்தமர்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. மதம் எந்த மதமாக இருந்தாலும் அது அபிந்தான். அந்த அபினிப் போதையில் மயங்கும் முழு மூட பகதர்களோ ஒரு சாமி இல்லை என்றால் இன்னொரு சாமியைத் தேடி ஒடுகிறார்கள். அப்படி உருவானவர்தான் இந்த நித்தியானந்தா. ஆனால் நித்தியின் லீலைகளை ஒவ்வொருவரின் வீட்டினுள்ளும் கொண்டு வந்து அத்து மீறி நுழைத்து ஆபாச வக்கிர ருத்திரதாண்டவம் ஆடியது சன் தொலைக்காட்சி. பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்த கடும் விசனங்களை அடுத்து சன் டிவி அதை நிறுத்தி கொண்டு செய்தியின் அடுத்த பரிணாமத்திற்குச் சென்று விட திராவிட இயக்கத்தின் கடைசிக் குஞ்சு என்று வர்ணிக்கப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் இருந்து சமூக நீதிக்கான பெரியார் விருதைப் பெற்றுக் கொண்ட நக்கீரன் இதழின் ஆசியரான நக்கீரன் கோபால் நித்தியானதாவின் சிடியையும் ஆபாச புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். சாமியாரின் பாலியல் உணர்வை விட பல மடங்கு வக்கிர ஆபாட வர்த்தக வெறிகொண்ட இந்த வக்கிர வெறியை ஒவ்வொரு வாரமும் நக்கீரன் இதழ் வெளிப்படுத்தி வருகிறது. சாமியாரின் வெளிவராத படங்கள், எடிட் செய்யப்படாத வீடியோ என்று கூவிக் கூவி விற்று காசு பார்க்கிறது நக்கீரன் இதழ்.
இப்படி தமிழர்களின் சமூக நீதியை காப்பாற்றிக் கொண்டிருக்கும் நக்கீரன் கோபால் இன்னொரு பிரபலமான மோசடிச் சாமியார் ஆன சத்குரு ஜக்கி வாசுதேவின் தொடரையும் வெளியிட்டு காசு பார்த்தது. இன்னொரு பக்கம் ஓம் என்னும் பெயரில் பக்தி பத்திரிகையும் நடத்திக் கொண்டிருக்கிறது. இவரை சமூக நீதி வீரராக கருணாநிதி சித்தரித்ததும் சமீபத்தில் நடந்து. விருதுக்குப் பெரியார் விற்பனைக்கு நித்தியானந்தா என்னும் கோபாலின் வக்கிர விற்பனை வெறியை அனைவரும் கண்டிக்க முனவரவேண்டும்.