24.12.2008.
ஈ.பி.டி.பி – சிறி ரெலோ ஆகிய கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் தொடர்பான முக்கிய சந்திப்பொன்று 21.12.2008. மாலை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கொழும்பிலுள்ள ஈபிடிபி பணிமனையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக, அரசியல் உரிமை, சுபீட்சமான வாழ்வு அனைத்திற்குமான செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படுவது என இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் ஆட்கடத்தல், கப்பம் வாங்குதல், கொலை, கொள்ளை போன்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதுடன் அதற்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சந்திப்பில் ஈபிடிபியின் சார்பில் டக்ளஸ் தேவானந்தாவும், புரட்சிமணி, கிபி, மற்றும் குலம் ஆகியோர் பங்குபற்றியதுடன் சிறி டெலோவின் சார்பில் அக்கட்சியின் முக்கியஸ்தர்களான உதயன், கஜன், சேனாதி ஆகியோர் பங்குபற்றியதாக
தெரிவிக்கப்படுகிறது.
தெரிவிக்கப்படுகிறது.