Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆக்கஸ் ஒப்பந்தம்- அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை!

20 ஆண்டுகால ஆப்கான் போரில் தோல்வியடைந்த அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. ஆசியாவில் தன் செல்வாக்கை நிலைநிறுத்தவும், பசுபிக் பிராந்தியத்தை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா,பிரிட்டன்,ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளும் இணைந்து ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது.

இது குவாண்டம் தொழில் நுட்பம், அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தொழில் நுட்பத்தை ஆஸ்திரேலியாவோடு பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் ஆகும். சீனாவை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியவை அணு வல்லமை பெற்ற நாடாக மாற்றும் இந்த முயற்சி பல நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியா பிரான்ஸ் நாட்டுடன் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க பிரான்சுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் அதிர்ச்சியடைந்த பிரான்ஸ் ஆக்கஸ் ஒப்பந்தம் நிலமையை திவிரமாக்கியிருக்கிறது என்றும், அமெரிக்கா நம்பிக்கை துரோகத்தை இழைத்து விட்டது என்றும் தெரிவித்தது. அத்தோடு ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கான தன் நாட்டு தூதரை திரும்ப பெற்றுக் கொண்டது பிரான்ஸ்.

இந்த ஒப்பந்தத்தை சீனாவும் கடுமையாக கண்டித்த நிலையில் இப்போது  ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு சமநிலையை ஆக்கஸ் ஒப்பந்தம் சீர்குலைக்கும் என்று வட கொரொயா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் இரண்டு வகையான ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. அவற்றில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையிலான க்ரூஸ் ரக ஏவுகணையும் அடங்கும்.

அமெரிக்காவின் ஆக்கஸ் ஒப்பந்த முயற்சி உலகம் முழுக்க வல்லரசு நாடுகளுக்கிடையில் மோதலையும் ஆசியாவில் பதட்டத்தையும் உருவாக்கியிருக்கிறது.

Exit mobile version