புலியெதிர்ப்பு , ஜன நாயகம், மாற்றுக் கருத்து, மாற்று அரசியல், அடையாள அரசியல் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு, செத்துக் கொண்டிருக்கும் மக்களின் பிணங்களின் மீது அரசியல் வியாபாரம் நடத்தும் ஒரு கூட்டம், பிள்ளையானதும் கருணாவினதும் ‘ஜனநாயக’ மீட்பில் பிஞ்சுக் குழந்தைகள்வரை பலியெடுக்கப்பட்ட போதும் கூட மூச்சுக்கூட விடாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த புலம்பெயர் ‘அறிவுஜீவிகள்’ தேசம் நெற் என்ற இணையத்தளத்திற்கெதிராக கையெழுத்து வேட்டை நடாத்தியிருக்கிறார்கள! கருத்துச் சுதந்திரத்திற்கு வரைவிலக்கணம் கூற விளையும் இந்தக் கையெழுத்துக் காரர்களில் பலரின் ‘ஜனநாயக ‘ வாழ்வு என்பது குரூரமான வேடிக்கை. அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போதெல்லம் இது தான் ஜன நாயகம் என்று பாடம் சொல்லித்தரும் வன் முறைக் கலாச்சாரம் எமக்குப் புதியதல்ல. நாங்கள் கொன்று போட்டுவிட்டு புலம்பெயரவில்லை! கொலைக் கரங்களிலிருந்து தப்பியோடி வந்தவர்கள்!! அதே வன்முறை அரசியல்.. அதே வன்முறை வெறி… 80 களின் நடுப்பகுதி; விஜிதரன் என்ற மாணவன் புலிகளின் பாசிசக் கரங்களுக்குப் பலியான போது கிளர்ந்தெழுந்த மாணவர்கள், இயக்கங்களின் அரசியலை விசாரணை செய்ய விழைந்த போது புலிகளின் யாழ் மாவட்ட தளபதி கிட்டு மிரட்டிய அதே பாணி. நல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கிட்டு முழங்கினார் ” அவதூறுகளுக்கு மறு பெயர் கருத்துச் சுதந்திரமல்ல, மாணவர்கள் போராட்டத்தை இழிவு படுத்துகிறார்கள்”.
இணையத்தளங்கள் புலம்பெயர் சூழலில் அரச கைக்கூலி அரசியலையும் ஏகாதிபத்திய சார் அரசியலையும் வினாவெழுப்பும் போதெல்லாம் அவதூறு செய்யப்படுகிறது எனக் கூக்குரலிடும் ஒரு கூட்டம் நடத்திய கையெழுத்து வேட்டையில் சிக்கிய ‘ நியாயமாகச்’ சிந்திக்கும் சில தோழர்கள் சிலர், அறிக்கையின் உள்ளடக்கம் அறியத் தரப்படாமலே தமது பெயர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டது என அங்கலாய்க்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் தனிமனித தாக்குதல்களின் உச்சிவரை சென்றுவரும் ஷொபா சக்தி போன்றோடனும் இவரின் பக்கவாத்தியங்களான ராகவன், நிர்மலா போன்ற முன்னை நாள் புலிகளின் மேல் மட்ட உறுப்பினர்களும் கூட ‘கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்ப்டுத்தும் வேலையைக் கையிலெடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள்.
தேசம் நெற் என்ற இணையத்தளத்திற்கெதிராக இலங்கை அரசின் நேரடிக் கைக் கூலிகளான ஞானம் அல்லது ஸ்டாலின் போன்றோரை இணைத்துக் கொண்டு அவதூறு பொழியும் இந்த அறிக்கையைச் சமர்ப்பிப்பவர்கள் மீதான அரசியல் தவிர்ந்த எந்தத் தனி நபர் தாக்குதல்களும் இது வரை எந்த இணையத்தளங்களும் மேற்கொண்டதாக இல்லை.
1.புலம் பெயர் அரசியலும் வன் முறையும்.
புலம் பெயர் சூழலில் 90 களின் ஆரம்பப் புகுதிகளிலான அரசியலின் இயல்பும் தரமும் 90
சில உதாரணங்கள்:
2002 ஆம் ஆண்டு பிரான்சில் வசிக்கும் அஷோக் யோகன் கண்ணமுத்துடனான கருத்துமுரண்பாட்டைத் தீர்த்துக் கொள்வதற்காக சுகன், ஷோபா ச்க்தி, தேவதாசன், ஞானம் போன்ற முரண்பாடுகளை அரசியலாக்கும் புகலிட அரசியலாளர்கள் தாதா பாணியில் அஷோக்கின் மீது குண்டர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.தேசம் நெற்றிற்கு எதிரான அறிக்கையில் இவர்களும் சேர்ந்து கொண்டு இன்று கருத்துச் சுதந்திரக் கட்டுப்பாட்டதிகாரிகளாக உருமாற்றம் பெறவிழைகின்றனர்.
இதே நபர்கள் மறுபடியும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டபோது அது அம்பலத்திற்கு வந்து புலம்பெயர் சூழலில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திற்று. பரிஸ் சார் இலக்கிய அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் இன்று இது அறியப்பட்ட சம்பவமாகிவிட்டது.
பாரிசின் தமிழர்கள் கூடும் இன்னொரு அறியப்பட்ட பகுதியான மார்கதே புவாசனியே என்ற இடத்திலுள்ள உணவு விடுதியையும் இதே குழுவினர் சிறிய முரண்பாட்டின் விளைவாக அடித்து சேதப்படுத்தினர்.
அ.மார்க்ஸ் போன்ற இந்திய அரசியல் வாதிகளையும் இழுத்துவந்து இந்த வன்முறையெல்லம் பின் நவீனத்துவ கலகக் குரல்கள் என நியாயம்வேறு கற்பிக்கின்றனர்.
இலங்கை அரசால் கொல்லப்பட்ட சமூக செவையாளரான கேதீஸின் நினைவுக் கூட்டத்தில் அவர் இலங்கை அரசால் தான் கொல்லப்படார் என அமைதியாக கூற முனைந்த ஒருவரை 150 பேருக்கு நடுவில் வைத்து ராகவன் தாக்கி கழுத்தில் பிடித்து வெளியேற்றிய சம்பவத்தையும் யாரும் மறந்து விடவில்லை.
இந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல் குருதியை உறைய வைத்த சம்பவம் தான் “ஜூலைப் படுகொலைகளிற்கெதிரான நெடுங்குருதி” நிகழ்வு.
பாரிசில் அறியப்பட்ட தாதாவான குகன் என்பவரின் தலைமையில், கீழ்வரும் அறிக்கையில் தம்மை இணைத்துக் கொண்ட தலித் முன்னணி, கிழக்கு முன்னணி, SLDF ஆகியவற்றின் உறுப்பினர்கள் மற்றும் ஷோபா சக்தி ஆகியோர் இணைந்து ” நெடுங்குருதி” நிகழ்வு திட்டமிடப்பட்டது. இந்தியக் கலகக்குரல் அ.மார்க்ஸ், குகனின் பணத்தில் இலவசமாக பாரிசிற்கு வந்திறங்க நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தது.
ஏற்கனவே கொலை முயற்சி, கப்பம், கோஷ்டிச் சண்டை போன்ற இன்னொரன்ன சம்பவங்களில் பாரிசில் தண்டனை அனுபவித்த குகன், ” நெடுங்குருதிக்கு” முதல் நாள், தனது பலசரக்குக் கடையில் வேலைசெய்த அப்பாவி ஒருவரைத் துப்பாக்கியால் சுட, பொலீசால் கைத்துசெய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார்.
மறு நாள் ஏதும் நடக்காததுபோல ஷோபா சக்தி, ராகவன் போன்ற கையொப்பக் காரர்களின் தலைமையில் ” நெடுங்குருதி” ஜாம் ஜாம் என்று நடந்தேறியது. கிழக்கிலங்கை அரசிற் தாதா பிள்ளையானின் சகாவான ஞானம் மற்றும் இவரின் கூட்டாளிகளான தேவதாஸ், அ.மார்க்ஸ் போன்றோர் கலந்து கொண்ட இந்ந்திகழ்வானது ஒரு ஜன நாயக நிகழ்வாக வேறு பிரச்சாரம் செய்யப்பட்டது. குகனின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவரும் அப்பாவி தொடர்பாக உச்சரிக்கக் கூட மறுத்துவிட்ட கூட்ட ஏற்பட்டாளர்கள், குகன் போன்றோரின் உதவியால் மட்டுமே புலிகளைச் சமாளிக்க முடியும் என்ற நியாயப்படுத்தலை வேறு இணையத்தளங்களில் பிரசுரித்தனர்.
தவிர, இந்தக் கையொப்பக் காரர்களின் வன்முறைகளின் சிறுபகுதியே இங்கு உதாரணங்களாக்கப்பட்டுள்லது.
இவை யாவுமே அரசியல் சார் வன்முறைகள் என்பதையும் கோடிட்டிக் காட்ட விரும்புகிறோம்.
1.1 தேசம் நெற்றும் வன்முறைக்கு எதிர்வினையும்
நெடுங்குருதி நிகழ்வை அம்பலப்படுத்தியதில் தேசம்னெற்றின் பங்கு கணிசமானது. குகன் பற்றியும், பாரிஸ் தாதாக்கள் மற்றும் அவர்களின் அரசியல் பற்றியும் தேசம் நெற்றில் பிரசுரமான கட்டுரைகளைத் தொடர்ந்து, வேற்று நாடுகளிலிருந்து பாரிசிற்கு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே வந்திருந்த பலர் கூட்டத்தைப் புறக்கணித்தனர். பாரிசின் அரசியல் ஆர்வலர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. கையொப்பக் காரர்களோ தேசம் நெற் இந்ந்திகழ்வு தொடர்பாக அவதூறு செய்ததாக அங்கலாய்க்கிறார்கள். ” முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைப்பது” போல.
இவர்களின் வன்முறை அரசியலுக் கெதிராக தேசம் நெற்றின் குரலைத் தனி நபர் தாக்குதல் என்றும் அவதூறு என்றும் நசுக்க முயலும் இவர்களின் இந்தச் செயற்பாடானது, இலங்கையில் ஆரம்பித்த வன்முறை அரசியலினதும் யாழ் மேல்தட்டு மேலாதிக்க அதிகாரத்தினதும் தொடர்ச்சியே!
யாழ் மேல்தட்டு ஆங்கிம் தெரிந்த அதிகார சக்திகளின் பிரவேசமும் எம்மத்தியில் ஏற்கனவே புரையோடிப் போயிருந்த வன்முறையும் கைகோர்த்துக் கொள்ள தேசம் நெற் தாக்கப்படுகிறது. ஜன நாயகத்தை வரையறுக்கும் சட்டம்பிகளாக உலாவரும் இவர்கள் சமூக உணர்வுள்ள சக்திகளுக்கெதிரான அவதூறுகளையும் வன்முறையையும் நிறுத்த இனியொரு சார்பில் கோருகிறோம்.
1.2. TBC வானொலி நிலையத் திருட்டும் SLDF கையொப்பக்காரர்களும்.
புலிகளுகெதிரான மேற்படி வானொலிச் சேவை கட்ந்த 9 வருடங்களாக பணிப்பாளர் ராம் ராஜின் அரசியலின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனோடு இணைந்து பணியாற்ரிய கீரன் என்ற கையெழுத்துக் காரர்களில் ஒருவரும் எஸ்.எல்.டி.எப் மற்றும் சமாதானத்திற்கான தமிழ் ஒன்றியம் ஆகியவற்றின் ஸ்தாபக உறுப்பினரும், வானொலியோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வெளியேறி வானொலிக்கு எதிராக 2003 அறிக்கை ஒன்றைப் பத்திரிகைகளுக்குச் சமர்ப்பித்திருந்தார்.
இதற்குச் சற்றுப் பின்னதான காலப்பகுதியில் ரீ.பி.சீ களவாடப்படது. பின்னதாக ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் tamilaffairs.com என்ற இணையம் இந்த கொள்ளையில் SLDF முக்கிய உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.
இச் செய்தி தொடர்பில் SLDF மௌனம் சாதித்ததைத் தொடர்ந்து தேசம் நெற், SLDF அறிக்கையொன்றை கோரும் கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருந்தது. பின்னதாக கீரன் இவ்வாறான செய்திகளுக்கு பதில் தர முடியாது என்று தடாலடியாகக் கூறிவிட இது தொடர்பான சந்தேகங்கள் வளர ஆரம்பித்தன.
இதில் வினோதம் என்னவென்றால் தேசம்னெறோ அதில் பின்னுட்டமிடும் வாசகர்களோ திருட்டுக்கும் SLDF தொடர்பிருப்பதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறியிருக்கவில்லை. ஆனால் கீழ் வரும் அறிக்கையில் கையொப்பக்காரர்கள் தேசம் நெற்றை இது தொடர்பாகச் சாடியிருப்பது சற்று நகைபிற்கிடமாயுள்ளது.
தேசம் நெற்றிற்கும் இணையத் தளங்களிற்கும் எதிரான இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுக்கள் ஜன நாயகத்தை அச்சுறுத்தும் செயலாகும்.
2. புலம் பெயர்சூழலும் அவதூறு அரசியலும்
90 களின் இறுதிக்கட்டமே அவதூறு அரசியலின் ஆரம்பக்காலகட்டமாகும். அறிக்கைக் கையொப்ப்க்காரர்களான ஷோபாசக்தியும் சகாக்களும் இணைந்து தமிழரங்கம் என்ற இணையத்தை நடாத்தும் ரயாகரன் இறந்து விட்டதாக அவதூறுப் பிரச்சாரம் மேற்கொண்டது
பின்னதாக இன்றைய எஸ்.எல்.டீ.எப் இன் பிரதான நபர்களும் இதன் சக அமைப்புக்களான தலித் முன்னணி கிழக்கிலங்கை முன்னணி ஆகியவற்றின் தலைமை மட்ட உறுப்பினர்களுமான சுகன்,ஷோபாசக்தி,ஞானம்,தேவதாஸ் ஆகியோரிணைந்து “அஷோக்கிற்கு ஒரு முத்தம்” என்ற தனிப்பட்ட தாக்குதலை மட்டுமே கொண்ட கையேட்டை பதிப்பித்து பாரிசில் வினியோகித்தனர். அஷோக்கிற்கு எதிராக மட்டுமல்ல, வேறு சில சமூக அக்கறையுள்ள சக்திகளை சங்கடத்திற்குள்ளாக்கும் வகையில் தொடர்ச்சியான அவதூறுகளை உமிழ்ந்தனர். குறிப்பாக சுபா, நா.கண்ணன் போன்றோருக்கெதிராகப் பிரசுரம் ஒன்றைத் தயாரித்து பிரங் போர்ட்டில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் வினியோகித்தனர்.
புகலிட அரசியல் பரப்பில் பல ஆண்டுகளாக அரசியல் செயல்பாட்டாளர்களால் அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்குமிடையில் தொடர்ந்து செயலூக்கத்துடன் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட மாற்றுக்கருத்து அரசியலின் பெறு பேறுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கே அவதூறுகளைப் பிரச்சாரப்படுத்தும் இந்தக் கையெழுத்துக் காரர்களின் நோக்கமாகும்..
மிக அண்மையில் யமுனா ராஜேந்திரன் என்ற எழுத்தாளருக்கு எதிராக ஷோபா சக்தியின் இணையமான சத்தியக்கடதாசியில் அவதூறுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது மட்டுமல்ல அவரது வதிவிட விலாசத்தையும் பிரசுரித்து கும்மாளமடித்தனர்.
இவர்களெல்லாம் தம்மைச் சுற்றிக் கட்டமைக்கும் பிம்பத்திற்கும் இவர்களின் ஆளும் வன்முறைக் கருத்தியலிற்கும் தேசம் நெற்போன்ற சுதந்திர இணையங்கள் தடையாக அமைகின்றபோதே இணையங்களுக்கெதிரான அவதூறுபிரச்சாரத்தை கையிலெடுத்துக் கொள்கின்றனர். இன்று வரை இது வன்முறை என்ற வடிவத்திற்கு நீட்சியடையவில்லை என்பது தற்காலிக மன அமைதியைத் தருகின்றது.(இன்னும் வரும்.. )
கையொப்பக்காரர்களின் அறிக்கை வருமாறு….
அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல
சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குகள் – குழுக்கள் நிலவும்போது எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுக் கருத்துகள் கொண்ட ஒருதரப்பைக் கருத்துப் பலமற்ற மற்றொரு தரப்பு அவதூறுகளால் ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளால் எதிர்கொள்வது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். இன்னொருபுறம் பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தாகத்தோடு அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும் போக்கும் சில ஊடகங்களில் காணப்படுகிறது. நமது சூழலில் நிதர்சனம்.கொம் தீப்பொறி.கொம் போன்ற ஆயுத அரசியல் சார்ந்த சில ஊடகங்களும் வெறும் பச்சை வியாபார ஊடகங்களுமே இந்த அவதூறுக் கலாச்சாரத்தின் பிரநிதிகளாக இருந்திருக்கிறார்கள்.
ஆனால் புலம் பெயர் சூழலில் மாற்றுக் கருத்தாளர்கள் எனத் தம்மைப் பிரகடனப்படுத்தி வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் இணையத்தளங்கள் ஊடாகக் கருத்து சுதந்திரம் என்ற பதாகையின் கீழ் அப்பட்டமான புனைவுகளையும் பொய்க்கதைகளையும் தனிமனித சேறடிப்புகளையும் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். இந்த இணையத்தளங்களும் இவ்வாறான செயலுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கித் தமது இணையத்தளத்தைப் பரபரப்பாக வைத்துக் கொள்ளும் மலினமான உத்திகளைச் செய்து வருகின்றன. இவர்களுக்கு இலங்கை பிரச்சனை பற்றிய அக்கறையை விடச் செயலூக்கம் கொண்டியங்கும் தனி நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் அவதூறு மேற்கொள்வதே தலையாய கடமையாகி வருகிறது.
வளர்ந்து வரும் இந்த ஜனநாயக விரோத போக்கு பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தாகம், அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும் போக்கு அவதூறான பின்னூட்டங்களை விட்டு மாற்றுக்கருத்தாளர்கள் மத்தியில் போட்டிகள் பூசல்களை உருவாக்கும் எத்தனம் தனிமனிதத் தாக்குதல்களை ஊக்குவித்தலில் அற்ப மகிழ்ச்சி, செயலூக்கம் கொண்ட மாற்றுக்கருத்தாளர்களின் மேல் அவதூறுகளை வீசி அவர்களின் பெயரைக்கெடுத்தல் போன்ற கேடுகெட்ட பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
வெளிப்படைத் தன்மை ஜனநாயகம் என்ற போர்வையில் தமது கருத்துக்களுக்கு உடன்படாத தனிமனிதரகள், மீதும் அமைப்புகள் மீதும் அவதூறுகளைச் செய்வதையே இவர்கள் தொடர்கின்றனர். ஆதாரமற்ற அவதூறுகளைப் பிரசுரித்து விட்டுப் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட தனி நபரோ அமைப்போ அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்பது தான் இவர்களது வாதம்.
ஜனநாயகச் சூழலைப் பலப்படுத்துவதும் அதிகாரத்தை விமர்சிப்பதுமான காத்திரமான நிலையை ஒரு ஊடகம் முன்னெடுக்கும்போது அதன் ஆசிரியர்கள் மிகவும் பொறுப்புணர்வுடனும் அரசியல் அறத்துடனும் வெளிப்படையாகவும் இயங்குவது முன்நிபந்தனையாகிறது. ஆனால் ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் எவ்வித ஆதாரங்களுமற்ற குற்றச்சாட்டுகளையும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெறும் கிசுகிசுக்களையும் யாரும் எழுதலாம் அதனைக் கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் இந்த ஊடகங்களும் பிரசுரிப்பார்கள் என்பது அறமற்ற நிலைப்பாடாகும். மறுபுறத்தில் ஆரோக்கியமான கருத்துருவாக்கத்துக்கும் நேர்மையான கருத்துப் பரிமாற்றத்துக்கும் இந்தப் போக்குத் தடையாகவுமுள்ளது. எனவே இந்தப் பொறுப்பற்ற இணையத்தளங்களின் போக்கை வெறுமனே பரபரப்பை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படும் மலிவான ஊடக உத்தி, என்று போகிற போக்கில் நாம் சாடிவிட்டு மட்டும் போய்விட முடியாது.
இலக்கியச் சந்திப்புப் போன்ற நிகழ்வுகளும் புலம்பெயர் சிறுபத்திரிகைக் கலாச்சாரமும் ஆயுதக் கலாச்சார எதிர்ப்பையும் மனித உரிமை மீறல்களுக்கெதிரான குரலையும் அதிகார அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் மாற்றுக் கலாச்சார மறுத்தோடி அரசியலையும் ஜனநாயக விழுமியங்களையும் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாகப் புலம் பெயர் நாடுகளில் கட்டமைத்துப் பேணி வந்துள்ளன. தலித்தியம் பெண்ணியம் புலம்பெயர் இலக்கியம் போன்ற பல்வேறு சிந்தனை போக்குகளும் செயல்பாடுகளும் இம்மாற்றுக் கருத்து அரசியலின் பன்முகத்தன்மையின், சகிப்புத் தன்மையின் பெறுபேறுகள்.
புகலிட அரசியல் பரப்பில் பல ஆண்டுகளாக அரசியல் செயல்பாட்டாளர்களால் அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்குமிடையில் தொடர்ந்து செயலூக்கத்துடன் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட மாற்றுக்கருத்து அரசியலின் பெறு பேறுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கே அவதூறுகளைப் பிரசுரிக்கும் இத்தகைய இணையத் தளங்களின் உள்நோக்கம் என நாம் கருதுகிறோம்.
திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வெளியாகும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் பல தனிமனிதர்களையும் அமைப்புகளையும் சக ஊடகங்களையும் சூழலிலிருந்து தனிமைப்படுத்தி ஒதுக்கும் நோக்கத்துடனும் உள்முரண்களைப் பகைமுரண்களாக்கும் தந்திரத்துடனும் மாற்றுக் கருத்தாளர்கள் இரத்தம் சிந்தி உருவாக்கிய சனநாயக் குரல்களின் தொகுப்பைச் சிதைக்கும் எத்தனத்துடனுமே எழுதப்படுகின்றன என்று நாம் கருதுகிறோம்.
இன்று ஆதிக்கத்திலிருக்கும் ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தின் கூறுகளே இந்த அவதூறுப் பிரச்சாரங்களின் கலாச்சார அடிப்படையாகும்.
சனநாயக வேடமிட்டு வன்முறைக் கலாச்சாரத்தை இத்தகைய ஊடகங்கள் ஊக்குவிக்கின்றன. பொய்கள் புனைவுகளின் அடிப்படையில் தனிமனித தாக்குதல்களையும் ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும் அரசியல் செயல்பாட்டாளர்கள் குறித்துப் பிரசுரித்து அவர்களின் பெயர்களுக்குக் ஊறு விளைவித்து அவர்களின் சமூக அரசியல் செயல்பாட்டை தடைசெய்யும் நடைமுறை, ஆயுதக் கலாச்சார அரசியலில் மாற்றுக் கருத்தாளர்கள் தடைசெய்யப்பட்டதற்கும் ஆதாரமின்றி குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்கும் ஒப்பானதே.
இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்கள் ஈடுபட்டிருந்தாலும் அண்மைக் காலங்களில் இத்தகைய போக்கினை முன்னெடுப்பதில் மிகுந்த தீவிரம் காட்டும் தேசம் இணையத்தளத்தில் இதுவரை வெளியான நூற்றுக்கணக்கான அவதூறுப் பக்கங்களிலிருந்து ஒரு சில துளிகளை மட்டும் இங்கே எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறோம்:
இலண்டன் தலித் மாநாட்டைக் குறித்து ஏராளமான அவதூறுகள் தேசம் நெற்றில் கட்டுரையாகவும் பின்னூட்டங்களாகவும் வெளியாயின. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி என்.ஜீ.ஓக்களின் வாலாகச் செயற்படுகிறது எனப் பொய்க் குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டன.
கலைச்செல்வனின் மூன்றாமாண்டு நினைவுகூரலில் நடந்த கருத்து விவாதங்கள் கொச்சையாகத் திரிக்கப்பட்டு தேசத்தில் வெளியாகின. அந்த விவாதம் குறித்து முற்றிலும் பொய்யான செய்திகளே எழுதப்பட்டன.
1983 ஜூலைப் படுகொலைகள் நினைவாகப் பிரான்ஸில் நடத்தப்பட்ட நெடுங்குருதி நிகழ்வு குறித்துப் பொய்யான தகவல்கள் பிரசுரிக்கப்பட்டன.
அண்மையில் நடந்த பெண்கள் சந்திப்புக் குறித்து விமர்சித்து எழுதப்பட்ட கேவலம் பிடித்த கட்டுரைகள் தேசத்தால் தேடிப் பிடித்து மறுபிரசுரம் செய்யப்பட்டன. பெண்கள் சந்திப்பில் உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டிருந்ததின் அரசியல் குறியீடு அர்த்தப்பாட்டையே கொச்சைப்படுத்தி அங்கே தொங்கவிடப்பட்டிருந்தவை உபயோகிக்கப்பட்டவையா எனக் கேட்டிருந்த வக்கிரமான பின்னூட்டமும் தேசத்தில் வெளியாகியது.
ரிபிசி வானொலி நிலையத்தில் களவாடியவர்கள் எஸ். எல். டி. எப் உறுப்பினர்களே என்றொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு தேசத்தில் பிரசுரமாகியது.
தேசம் தனக்குக் கிடைக்கும் தகவல்களை அடிப்படை ஊடகவியலாளரின் விதிமுறைகளுக்கமைய சரி பிழை பார்ப்பது கிடையாது. எழுந்தமானமாகக் குற்றச்சாட்டுகளைத் தேசம் அள்ளியெறியலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களே பதிலளித்து தங்கள் நற்பெயரை நிறுவ வேண்டும் என்பது தேசத்தின் கருத்து. தேசம் இதுவரை வெளியிட்ட சரமாரியான குற்றச்சாட்டுகளுக்கும் பழிப்புகளுக்கும் இதுவரை எதுவித ஆதாரங்களையும் சமர்ப்பித்ததில்லை.
அரசியல் – கலை இலக்கியத் தளங்களில் தனியாகவும் அமைப்பாகவும் இயங்கும் நாம் பின்வருபனவற்றை வலியுறுத்தி இந்தக் கூட்டு அறிக்கையை வெளியிடுகிறோம்:
1. கடந்த காலங்களில் தேசம் இணையத்தளத்தில் ஆதாரங்களில்லாமல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைத் தேசம் ஆசிரியர் குழுவினர் வெளியிட வேண்டும். ஆதாரங்களை வெளியிடமுடியாத பட்சத்தில் தேசம் இணையத்தளம் ஊடக நெறிகளின்படி வருத்தம் தெரிவித்தாக வேண்டும்.
2. செய்திகள் கட்டுரைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் (அவை தனிநபர்களையோ அமைப்புகளையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ அவதூறு செய்யும் நோக்கில் எழுதப்பட்டிருப்பின்) பிரசுரிப்பதை நிறுத்த வேண்டும்.
11 செப்ரம்பர் 2008
தொடர்புகளுக்கு: opposecalumny@googlemail.com
1. கற்சுறா – மற்றது – கனடா
2. அருந்ததி – தலித் சமூக மேம்பாட்டு முன்னணி – பிரான்ஸ்
3. ரஞ்சி -ஊடறு- சுவிஸ்
4. செழியன் – கருமையம்- கனடா
5. நிர்மலா ராஜசிங்கம் – எஸ். எல். டி..எவ் – இங்கிலாந்து
6. அ. தேவதாசன் – தலித் சமூக மேம்பாட்டு முன்னணி – பிரான்ஸ்
7. பௌஸர் – மூன்றாவது மனிதன் – இங்கிலாந்து
8. அசுரா – தலித் சமூக மேம்பாட்டு முன்னணி – பிரான்ஸ்
9. யோகரட்ணம் – தலித் சமூக மேம்பாட்டு முன்னணி – பிரான்ஸ்
10. சுந்தரலிங்கம் -தலித் சமூக மேம்பாட்டு முன்னணி – பிரான்ஸ்
11. ஷோபாசக்தி – சத்தியக்கடதாசி -பிரான்ஸ்
12. சுகன் – சத்தியக்கடதாசி – பிரான்ஸ்
13 தியோ ரூபன் – சத்தியக்கடதாசி – பிரான்ஸ்
14. விஜி – கிழக்கிலங்கை ஜனநாயக முன்னணி – பிரான்ஸ்
15. எம். ஆர். ஸ்டாலின் – கிழக்கிலங்கை ஜனநாயக முன்னணி – பிரான்ஸ்
16. ராகவன் – எஸ். எல். டி. எவ்- இங்கிலாந்து
17. எஸ் பஷீர் எஸ்.எல்.எம்.அய்.சி -இங்கிலாந்து
18. சந்துஷ் – எஸ். எல். டி. எவ்- இங்கிலாந்து
19. நமோ பொன்னம்பலம் – எஸ். எல். டி. எவ்- கனடா
20. அகிலன் கதிர்காமர் – எஸ். எல். டி. எவ்- யு.எஸ்.ஏ
21. டாக்டர் நீதிராஜா – பி.யூ..டி.எஸ். – இங்கிலாந்து
22. ரவி பொன்னுத்துரை – வைகறை – கனடா
23. சாந்தன் – விம்பம் – இங்கிலாந்து
24. ஜெபா – மற்றது- கனடா
25. ரவி – மனிதம் -சுவிஸ்
26. ரகு கதிரவேலு – ஈழநாசம் இணையத்தளம் – கனடா
27. நஜா மொகமட் எஸ்.எல்.அய்.எப் – இங்கிலாந்து
28. கே. கிருஷ்ணராஜா விம்பம் – இங்கிலாந்து
29. டாக்டர் ரயீஸ் முஸ்தபா எஸ்.எல்.அய்.எப் – இங்கிலாந்து
30. எஸ்.எம்.மார்சூக் இஸ்லாம்- அய்.எஸ்.ஏ.எம் – இங்கிலாந்து
31. வில்பிரெட் வில்சன் வைகறை – கனடா
32. ஏ.குமாரதுரை விழிப்பு இணையத்தளம் – டென்மார்க்
33. கீரன் – இங்கிலாந்து
34. செல்வராஜா ஆதவன் – கனடா
35. வாசுகி பரமசாமி – கனடா
36. விஜயகுமாரி முருகையா – கனடா
37. தர்சனா தர்மலிங்கம் – இங்கிலாந்து
38. எஸ். சுந்திரகுமார் – இங்கிலாந்து
39. எஸ். தவராஜா – இங்கிலாந்து
40. ஷாரிகா திராணகம – நெதர்லாந்து
41. டாக்டர் நிக்கலஸ்பிள்ளை – இங்கிலாந்து
42. ரஜிதா. எஸ். வேலு- இங்கிலாந்து
43. உமா – ஜெர்மனி
44. மல்லிகா பரராஜசிங்கம்- ஜெர்மனி
45. எஸ்.பாலன் – இங்கிலாந்து
46. எஸ். வேலு – இங்கிலாந்து
47. மு. நித்தியானந்தன் – இங்கிலாந்து
48. அபி இராசரட்ணம் – இங்கிலாந்து
49. காண்டீபன் – இங்கிலாந்து
50. த.ஜெயகுமார் – இங்கிலாந்து
51. போல் பெர்னான்டோ – இங்கிலாந்து
52. அகிலன் வர்ணகுலசிங்கம் – இங்கிலாந்து
53. சிவசாமி சிவராஜன் – ஜெர்மனி
54. மங்கை சிவராஜன் – ஜெர்மனி
55. தர்மினி – பிரான்ஸ்
56. தேவா – சுவிஸ்
57. சங்கீதா ஜெயகுமார் – இங்கிலாந்து
58 சுமதி ரூபன் – கனடா
59. இன்பா சுசீந்திரன் – ஜெர்மனி
60. ந. சுசீந்திரன் – ஜெர்மனி
61. மனோரஞ்சன் – கனடா
62. ஏ. எம். ரஷ்மி – இங்கிலாந்து
63. போல்(நரேஷ்) – இங்கிலாந்து
64. ஜெமினி – ஜெர்மனி
65. நந்தன் – ஜெர்மனி
66. நிமோ – ஜெர்மனி
67. சங்கர் – ஜெர்மனி
68. நா.சபேசன் – இங்கிலாந்து
69. நா. சிறி கெங்காதரன் – இங்கிலாந்து
70. ஈசன் சோமசுந்தரம் – இங்கிலாந்து
71. எம்.வை.எம் சித்தீக் – இங்கிலாந்து
72. பாலசூரியன் – நெதர்லாந்து
இந்தக் கூட்டறிக்கையைப் பிரசுரம் செய்யுமாறு கோரி கீழ்வரும் இணையத்தளங்களிற்கு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளோம்.
1. தேனீ
2. ஊடறு
3. தூ
4. உயிர்நிழல்
5. சத்தியக்கடதாசி
6. இனியொரு
7. பதிவுகள்
8. கரித்துண்டு
9. விழிப்பு
10. தாயகம்
11. ஈழநாசம்
12. கீற்று
12. தேசம்
13. நெருப்பு
14. அதிரடி
15. உதயம்-நெற்
16. ஈர்அனல்